சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட சூட்டிங் துபாயில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே63 படத்திற்காக அஜித் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.