உலகில் 2022 கணக்கின்படி, 4 கோடி பேர் எய்ட்ஸ் பாதிப்புடன் வாழ்கின்றனர். இதில் 2022ல் மட்டும் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 6.30 லட்சம் பேர் பலியாகினர். எய்ட்ஸ் பாதிப்பு, தடுக்கும் முறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச. 1ல் உலக எய்ட்ஸ் தினம்
கடைபிடிக்கப்படுகிறது. இது எச்.ஐ.வி., வைரசால் ஏற்படுகிறது. ‘சமூகம் வழிநடத்தட்டும்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. 1988ல் எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலாக எய்ட்ஸ் இருப்பதை 2030க்குள் முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement