சென்னை நகர் மழையில் தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது : அண்ணாமலை

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மழைக்காலத்தில் சென்னை நகர் தத்தளிப்பது  வாடிக்கை ஆகி விட்டதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்கிறது. நேற்று இரவில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அசோக் நகர், மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்தது. சென்னை சாலைகளில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர். குறிப்பாக, … Read more

மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர்

கடந்த மே மாதம் மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. 2018ல் கேரளாவையே புரட்டிப்போட்ட பெரும் மழை வெள்ளத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் கிட்டத்தட்ட 175 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பே இவர் இரண்டு படங்களை இயக்கியிருந்தாலும் இந்த படம் தான் அவரை முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்த்தி உள்ளது. நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை மையப்படுத்தி கதையை … Read more

Rajinikanth wishes: தேசிங்கு பெரியசாமியை பாராட்டிய சூப்பர்ஸ்டார்.. எதுக்காக தெரியுமா?

சென்னை: ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அடுத்ததாக சிம்பு -தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாகவுள்ள படம எஸ்டிஆர் 48. இந்தப் படத்தின் அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்காக தன்னுடைய பிட்னசை மேம்படுத்தி வருகிறார் நடிகர் சிம்பு. நடிகர்

மதுரை – சொக்கலிங்கபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு: புகாரளித்த விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மறுப்பு

மதுரை: மதுரை கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் பல லட்சம் முறைகேடு செய்ததாக புகார் தெரிவித்த விவசாயிகளுக்கு தற்போது பயிர்க்கடன் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை கூட்டுறவுத் துறை துணைப்பதிவாளர் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2015-ல் ஜனவரி முதல் டிசம்பர் வரையில் போலி ஆவணங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்டோருக்கு பயிர்க்கடன் … Read more

“ராஜஸ்தானில் ஆட்சியை காங்கிரஸ் தக்கவைக்கும்” – 3 காரணங்களை முன்வைத்த அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் என்னவாக இருந்தாலும் ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்த அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், அதற்கான மூன்று காரணங்களையும் அடுக்கினார். மேலும், ராஜஸ்தானில் மட்டும் இல்லை, 5 மாநிலங்களிலும் பாஜக வெற்றியடையாது என்றும் கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், “முதலாவதாக ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக எந்த எதிர்ப்பலையும் இல்லை. இரண்டாவது காரணம் முதல்வர். வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் முதல்வர் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.   தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முதல் சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. மழையால் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை பெய்ய … Read more

Trinamul Cong.- MLAs house CBI raid | திரிணமுல் காங்., – எம்.எல்.ஏ., வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு

கோல்கட்டா,மேற்கு வங்கத்தில், பள்ளி ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் வழக்கில், திரிணமுல் காங்., – எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்களுக்கு சொந்தமான இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளிகளில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடந்ததாக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் விசாரணை … Read more

சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர்

அருண் மாதேஸ்வரன் தமிழில் ராக்கி, சாணிக் காகிதம் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது நடிகர் தனுஷை வைத்து 'கேப்டன் மில்லர்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இதிலிருந்து முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பொங்கலுக்கு படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற தனது சமூக வலைதள கணக்கை தற்காலிகமாக எந்த அறிவிப்பின்றி நீக்கியுள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் … Read more