Ameer: \"வடசென்னை ஷூட்டிங் முடியும் வரை தனுஷை சந்திக்கவே இல்லை..\" அமீர் சொன்ன காரணம்!

சென்னை: அமீரின் பருத்திவீரன் பட விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பலரும் அமீருக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் நடித்தது குறித்து அமீர் மனம் திறந்துள்ளார். அதில், வடசென்னை படப்பிடிப்பு முடியும் வரை தனுஷை சந்திக்கவே இல்லை எனவும் அதற்கான காரணத்தையும் அமீர் ஓபனாக பேசியுள்ளார்.

2 மனைவி, 6 காதலிகள், 9 குழந்தைகள்… ஆடம்பர வாழ்க்கைக்கு திருடனாக மாறிய சோஷியல் மீடியா பிரபலம்!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த அஜீத் மயூரா என்பவர் சோஷியல் மீடியாவில் பிரபலம் ஆனவர். சமீபத்தில் பணமோசடி, இன்சூரன்ஸ் மோசடி, திருட்டு தொடர்பான வழக்குகளில் மயூரா கைது செய்யப்பட்டார். பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி தர்மேந்திரா என்பவரிடம் ரூ.3 லட்சத்தை மயூராவும் அவரின் ஆட்களும் வாங்கி ஏமாற்றி இருக்கின்றனர். இது குறித்து தர்மேந்திரா கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மயூராவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மீது 9 கிரிமினல் … Read more

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி கொள்ளையடிப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்க: சிஐடியூ

மதுரை: மதுரையில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம், மதுபாட்டில்களை கொள்ளையடிக்கும் சமூக விரோதிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சிஐடியு டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் எம்.சுந்தரமகாலிங்கம் தலைமையில் பொதுச்செயலாளர் டி.சிவக்குமார், பொருளாளர் ஜி.பொன்ராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரா.லெனின் ஆகியோர் கூறியதாவது: “மதுரை (தெற்கு) மாவட்டம் டாஸ்மாக் மதுபானக்கடை எண்-5505-ல் நவ.25-ம் தேதி … Read more

தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் ‘டீப்ஃபேக்’ பயன்படுத்தியதாக பிஆர்எஸ் கட்சி புகார்

ஹைதராபாத்: தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் ‘டீப்ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பிஆர்எஸ் கட்சி புகார் கொடுத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று (நவ.30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. “இங்கு காங்கிரஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பிஆர்எஸ் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை குறிவைத்து டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. அவர்களை உண்மைக்குப் புறம்பாக சித்தரிக்க முயன்றுள்ளது” என தேர்தல் ஆணையத்தில் பிஆர்எஸ் கட்சி … Read more

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கேப்டன் ரோஹித் வாய்ப்பளிக்கவில்லை -அஸ்வின்

ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி: 2023 ஒருநாள் உலகக் கோப்பை (ODI World Cup 2023) தொடரை இந்தியா நடத்தியது. ஆனால், நவம்பர் 19 ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா தோற்கடித்ததன் மூலம் கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு கலைந்தது. நவம்பர் 19 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது ஆறாவது ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. ஒருநாள் உலகக் … Read more

தமிழகத்தை நோக்கி வரும் மிக்ஜம் புயல்

சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் மிக்ஜம் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று தற்[ஓது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது.  அடுத்த 24 மணி நேரத்துக்குள் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்குப் பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் … Read more

விமானத்திற்குள் திடீரென கொட்டிய தண்ணீர்.. தவித்த ஏர் இந்தியா பயணிகள்.. கொட்டி தீர்த்த நெட்டிசன்கள்

அமிர்தசரஸ்: ஏர் இந்தியா விமானத்திற்குள் திடீரென தண்ணீர் கொட்டியதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து லண்டன் நோக்கி சென்ற விமானத்திற்குள் திடீரென மழை நீர் போல தண்ணீர் கசிந்துள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் இதனால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இது Source Link

40 percent commission charge 600 page document submission | 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு 600 பக்க ஆவணம் சமர்ப்பிப்பு

பெங்களூரு:முந்தைய பா.ஜ., அரசு மீதான 40 சதவீத குற்றச்சாட்டு சுமத்திய, கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, 600 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை, நீதிபதி நாக்மோகன்தாஸ் தலைமையிலான ஆணையத்திடம் ஒப்படைத்தார். கடந்த பா.ஜ., ஆட்சியில் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக, மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத் தினர் குற்றம் சாட்டிஇருந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த, தற்போதைய காங்கிரஸ் அரசு, நீதிபதி நாக்மோகன் தாஸ் தலைமையிலான ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்திடம், நேற்று கெம்பண்ணா, 40 சதவீதம் … Read more

ஹாலிவுட் பாணியில் உருவாகும் 'பைட் கிளப்'

'உறியடி' படத்தின் மூலம் புகழ்பெற்றவர் விஜய்குமார். அதன்பிறகு சூர்யா தயாரிப்பில் உறியடி இரண்டாம் பாகத்தை இயக்கினார். தற்போது அவர் நடிக்கும் படம் ‛பைட் கிளப்'. ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாங்கி வெளியிடுகிறார். அவரது 'ஜி ஸ்குவாட்' நிறுவனத்தின் முதல் வெளியீடு இது. அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கியுள்ளார். விஜய்குமார் ஜோடியாக மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன், சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணன் … Read more

Vetri maaran: அஜித்திடம் கதை சொல்லி ஓகே செய்த வெற்றிமாறன்.. ஏகே64ல் இணையும் கூட்டணி!

சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட சூட்டிங் துபாயில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே63 படத்திற்காக அஜித் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.