அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.72 லட்சம் கோடி

புதுடெல்லி, இந்தியாவில் ஆண்டுதோறும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்து வருகிறது. 2017-18-ம் நிதியாண்டில் மாதம் ஒன்றிற்கு சராசரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் இருந்து வந்தது. எனினும், கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21-ம் நிதியாண்டுக்கு பின்னர் விரைவாக வசூல் அதிகரித்து, 2022-23-ம் நிதியாண்டில் சராசரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில், கடந்த அக்டோபரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக உள்ளது என நிதி அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது. … Read more

உலகக்கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து விலகும் ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்.!!

புது டெல்லி, 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் அரைஇறுதியை எட்டவில்லை. இதில் பங்கேற்றுள்ள முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. பின்னர் எழுச்சி பெற்று தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 4ஆம் தேதி … Read more

இந்திய-போர்ச்சுகல் உறவுகளில் இவைதான் இயங்கு சக்திகள்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

லிஸ்பன், போர்ச்சுகல் நாட்டுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், அந்நாட்டின் அதிபர் அகஸ்டோ சான்டோஸ் சில்வாவை இன்று காலை சந்தித்து பேசினார். இதுபற்றி அவர் கூறும்போது, இந்த சந்திப்பில் இருதரப்பு உறவை பற்றிய ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எங்களுடைய விவாதத்தில் இடம் பெற்ற சில விசயங்களை பற்றி, வளர்ச்சி காணும் வகையில் ஆய்வு மேற்கொள்ளும்படி கூட்டு பொருளாதார குழுவை நாங்கள் கேட்டு கொள்ள இருக்கிறோம் என கூறினார். இதுதவிர, … Read more

Leo Success Meet: "எந்தப் பிரச்னை வந்தாலும் நான் இருக்கேன்னு விஜய் சொன்னார்!" – தயாரிப்பாளர் லலித்

`லியோ’ படத்தின் வெற்றிவிழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மிகுந்த பொருட் செலவில் ‘செவன் ஸ்கிரீன்’ நிறுவனத்தின் லலித்குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘லியோ’தான். லோகேஷ் – விஜய் கூட்டணி என்பதால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் வசூல் சாதனை செய்து வருகிறது. இதற்கிடையில் படத்தின் வெளியீட்டின்போதும், படத்தின் கதை குறித்தும், வசூல் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தன. Leo Success Meet Leo Success Meet: “தமிழகத்தின் `நாளைய தீர்ப்பு’ … Read more

“சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 3 ஆண்டுகளாக செயல்படவில்லை” – பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 3 ஆண்டுகளாக செயல்படவில்லை என்று முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சாவூர் பெரிய கோயிலில் தரிசனம் மேற்கொண்ட அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திரகபூரை 2011-ம் ஆண்டில் ஜெர்மனியில் கைது செய்து, இந்தியாவுக்கு 2012-ம் ஆண்டு கொண்டு வந்து தமிழக சிறையில் அடைத்தோம். அதன்பிறகு நாங்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், நியூயார்க்கில் உள்ள நுண்ணறிவு பிரிவினர் நீதிமன்றத்தில் ஏராளமான ஆணைகளைப் பெற்று, சுபாஷ் சந்திரகபூரின் … Read more

‘ஹேக்கிங்’ விவகாரம்: அரசியலமைப்பை மோடி அரசு தவறாகப் பயன்படுத்துவதாக கபில் சிபல் சாடல்

புதுடெல்லி: “அரசியலமைப்பை மோடி அரசு தவறாகப் பயன்படுத்துகிறது” என்று எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களுக்கு ஆப்பிள் அனுப்பிய ‘ஹேக்கிங்’ அலர்ட் செய்தி குறித்து மக்களவை எம்.பி கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தவறு செய்பவர்களை மத்திய அரசே தன் பக்கம் வைத்துள்ளது. பின்னர் அவர்கள் ஏன் எதிர்க்கட்சிகளைப் பற்றிப் பேச வேண்டும். பாஜக ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து அரசியலமைப்புக்கு முரணான செயல்களை செய்து வருகிறது. பாஜகவைச் சேர்ந்தவர்கள் மீது … Read more

Leo Success Meet: லியோ வெற்றி விழா தொடங்கியது.. ட்விட்டரில் கொண்டாட்டம்

Leo Success Meet: லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று பிரம்மாண்டமாக அரங்கேறி வருகிறது.

Leo Success Meet: "தமிழகத்தின் `நாளைய தீர்ப்பு' விஜய்யாக இருக்க வேண்டும்!" – மன்சூர் அலிகான் அதிரடி

நேரு உள்விளையாட்டு அரங்கில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கோலாகலமாக நடைபெற்றுவரும் `லியோ’ வெற்றி விழாவில் நடிகர் விஜய் குறித்தும் ‘லியோ’ படத்தின் ஃபிளாஷ்பேக் குறித்தும் பேசினார் நடிகர் மன்சூர் அலிகான். இதுகுறித்து பேசிய அவர், “நெஞ்சில் குடியிருக்கும் தளபதி ரசிகர்களுக்கு நான் சொல்லும் பிளாஷ்பேக் ‘லை (lie)….’” எனப் பாடலாகப் பாடி தன் பேச்சைத் தொடங்கினார் மன்சூர் அலிகான். பின்னர், “எஸ்.ஏ.சி ஒரு தீர்க்கதரிசி! தமிழகத்தின் `நாளைய தீர்ப்பு’ விஜய்யாக இருக்க வாழ்த்துகள். படத்துல நானும், விஜய் தம்பியும் … Read more

சச்சின் டெண்டுல்கருக்கு மும்பையில் 22 அடி உயர முழு உருவச் சிலை… மகாராஷ்டிரா முதல்வர் திறந்து வைத்தார்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் முழு உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. 1973 ம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மும்பையில் பிறந்த டெண்டுல்கர் தனது 50 வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடி மகிழ்ந்தார். 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 15,921 … Read more

இப்படி ஒரு தீபாவளி போனஸை வாழ்நாளில் பார்க்க முடியாது.. இன்ப அதிர்ச்சி கொடுத்த நீலகிரி சிவக்குமார்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தனது டீ எஸ்டேட்டில் பணியாற்றும் 15 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக அவரவர் விரும்பும் வாகனங்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார். இந்த வீடியோ தான் சமூக வலைதளத்தில் இப்போது பேசுபொருளாக மாறி உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. இன்னும் சில நாளில் தீபாவளி போனஸ் பல நிறுவனங்களில் போடப்போகிறார்கள். Source Link