Pregnant actress dies of heart attack | கர்ப்பிணி நடிகை மாரடைப்பால் மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருவனந்தபுரம்: மலையாள டி.வி. நடிகை பிரியா,34, மருத்துவரான இவர் 8 மாத கர்ப்பிணியாக வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை வந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த 8 மாத குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றி ஐ.சி.யு.-வில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். நடிகை மாரடைப்பால் இறந்த செய்தியை பிரபல நடிகர் கிஷோர் சத்யா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். திருவனந்தபுரம்: மலையாள … Read more

மீண்டும் வருகிறார் ரம்பா

ஒரு காலத்தில் ரசிகர்களுக்கு உள்ளத்தை அள்ளி தந்தவர்களில் முக்கியமானவர் ரம்பா. 'தொடை அழகி' என்று வர்ணிக்கப்பட்டவர். தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தார். 1993ல் 'உழவன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார். அடுத்த 20 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தற்போது திருமணமாகி 3 குழந்தைகளுடன் குடும்பத் தலைவியாக … Read more

Leo Success Meet: காக்கா கழுகு கதைக்கு குட்டி ஸ்டோரி சொன்ன ரத்னகுமார்.. அரங்கமே சும்மா அதிருது!

சென்னை: ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கழுகு vs காக்கா கதை சொன்னது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நடிகர் விஜய்யை தான் காக்கா என ரஜினிகாந்த் சொன்னாரா என ஏகப்பட்ட விவாதங்களும் ட்ரோல்களும் கிளம்பின. லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் குட்டி ஸ்டோரி மூலம் அதற்கு பதிலடி

திருவனந்தபுரத்தில் களைகட்டிய 'கேரளீயம் திருவிழா'

திருவனந்தபுரம், கேரளா மாநிலத்தின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாக ‘கேரளீயம் 2023’ நிகழ்ச்சி கருதப்படுகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியானது நவம்பர் 1ம் தேதி(இன்று) தொடங்கி 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கேரளா மாநிலத்தின் முன்னேற்றங்கள், சாதனைகள், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விழாவானது ஒரு வாரம் நடைபெற உள்ளது. இதனை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று துவக்கி வைத்தார். மேலும் இந்த … Read more

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; டொமினிக் தீம் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்..!!

பாரீஸ் , பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி வரும் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த டொமினிக் தீம், சுவீஸ் நாட்டை சேர்ந்த வாவ்ரிங்கா உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த தீம் , பின்னர் அதிரடியாக விளையாடி அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றி வெற்றி … Read more

காசாவில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் வெளிநாட்டு மக்கள்

காசா முனை, இஸ்ரேலுக்குள் கடந்த 7-ந் தேதி புகுந்து தாக்குதலை நடத்திய ஹமாஸ் அமைப்பினர், வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். சமீபத்தில் அமெரிக்கா, இஸ்ரேலை சேர்ந்த 4 பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தனர். இந்த நிலையில் வெளிநாட்டு பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் படை பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு உபைடா வெளியிட்ட வீடியோவில், வரும் நாட்களில் பல வெளிநாட்டு பிணைக் கைதிகளை விடுவிக்க உள்ளோம். … Read more

VW Taigun – ஃபோக்ஸ்வேகன் டைகன் ஜிடி ட்ரையல் எடிசன் அறிமுகமானது

ஃபோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி காரில் கூடுதல் பாடி கிராபிக்ஸ் பெற்ற GT எட்ஜ் ட்ரையல் எடிசன் விற்பனைக்கு நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினுடன் டைகன் ஜிடி எட்ஜ் ட்ரையல் எடிசன் ஆனது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது. Volkswagen Taigun GT Edge Trail Edition டைகன் ஜிடி டிரெயில் எடிஷன் எஸ்யூவி காரில் 150 hp பவர், 250 Nm … Read more

“PMLA சட்டத்தின்கீழ் ஜெட் ஏர்வேஸின் ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!" – அமலாக்கத்துறை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரூ.538 கோடியளவில் கடன் மோசடி செய்ததாக சிபிஐ-யிடம் கனரா வங்கி புகாரளித்தது. அதாவது, நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.848 கோடியில் ரூ.538 கோடி நிலுவையிலிருப்பதாக குற்றம்சாட்டியது. அதன்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், அவரின் மனைவி அனிதா, நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவுசெய்தது. பின்னர் இந்த வழக்கை கையிலெடுத்த அமலாக்கத்துறை, இதனை பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் வழக்கு பதிவுசெய்தது. ஜெட் ஏர்வேஸ் அதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் … Read more

சென்னையில் வாகனங்களுக்கான வேக வரம்பு நிர்ணயம் – நவ.4 முதல் அமல்

சென்னை: சென்னையில் வாகனங்களுக்கான வேக வரம்புகளை நிர்ணயித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை ஆட்டோக்கள் 35 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 25 கி.மீ வேகத்திலும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: சென்னை பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகன … Read more

“மதம், சாதியின் பெயரால் மக்களை பாஜக முட்டாளாக்குகிறது” – கார்கே குற்றச்சாட்டு

சுக்மா(சத்தீஸ்கர்): மதம், சாதியின் பெயரால் மக்களை பாஜக முட்டாளாக்குகிறது என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். சத்தீஸ்கரில் வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அம்மாநிலத்தின் சுக்மா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றினார். அவரது உரை விவரம்: “காங்கிரஸ் கட்சியை கேலி செய்வதையே பாஜக வழக்கமாகக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி நாட்டுக்காக எண்ணற்ற தியாகங்களை செய்திருக்கிறது. மகாத்மா … Read more