ஹமாஸ்-க்கு ஆதரவாக போரில் குதித்த ஏமன்..!

காசா முனை, பாலஸ்தீனத்தின் காசா முனை மீது போர் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினரும் களம் குதித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். பாலஸ்தீன வெற்றிக்காக இந்த தாக்குதல் தொடரும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏவுகணை தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் … Read more

Road Accidents in 2022 – தினமும் 427 பேர் மரணம்., சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியளவில் நடந்த சாலை விபத்து தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தம் 4,61,312 விபத்துகளில் சிக்கி அதில் 1,55,781 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4,43,366 பேர் காயம் அடைந்துள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 64,105 சாலை விபத்துகள் பதிவாகியும், அதனை தொடர்ந்து  54,432 விபத்துகள் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. Road Accidents in 2022 முந்தைய 2021 ஆம் ஆண்டு 4,12,432 ஆக இருந்த … Read more

“வேரும் தண்டும் கிடையாது" – செர்பியா உருவாக்கிய செயற்கை மரம்… என்ன செய்யும் தெரியுமா?

கீச்சிடும் குருவிகளோ காற்றில் சலசலக்கும் இலைகளோ இல்லாமல் ஒரு மரத்தை நினைத்து பார்க்க முடியுமா? என்ன கேள்வி இது. மரமென்றாலே இலைதழைகளில்லாமல் இருக்க முடியுமா என்ன? இருக்க முடியுமே. வேரும் தண்டும் இல்லாமல் வெறும் திரவத்தை மட்டுமே வைத்து ஒரு மரத்தையே செர்பியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். ஆமாம் வெறும் திரவத்தினால் ஆன மரம். நாம் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை உரிந்து கொண்டு ஆக்ஸிஜனை வெளியேற்றும் சாதாரண மரம் செய்யும் வேலையை செய்கிறது இந்த … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையம் செலவு ரூ.5.60 கோடி: பரிந்துரைகளை அரசு நிறைவேற்றுமா?

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையத்துக்கு ரூ.5.60 கோடி செலவாகியுள்ள நிலையில், அந்த ஆணையம் அளித்த பரிந்துரைகளை தமிழக அரசு நிறைவேற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்துக்கு தமிழக அரசால் ரூ.5 கோடியே 60 லட்சம் செலவிடப்பட்ட நிலையில், அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தால், … Read more

“தெலங்கானாவில் பாஜக 2% வாக்குகளையே பெறும்” – ராகுல் காந்தி பேச்சு

நாகர்கர்னூல் (தெலங்கானா): தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 2 சதவீத வாக்குகளையே பெறும் என்றும், இங்கு பாரத் ராஷ்ட்ர சமிதிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் போட்டி என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தெலங்கானாவின் நாகர்கர்னூலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முக்கிய … Read more

சீதா ராமன் அப்டேட்: மகாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் சீதா, ஷாக்கான ராம்!!

Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

திருநெல்வேலி: பட்டியலின மாணவர்கள் மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமிகள் கைது

திருநெல்வேலியில் குளிக்கச் சென்ற இரண்டு பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி கஞ்சா போதையில் சித்தரவதை செய்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.  

சதமாக விளாசும் டீகாக்… அப்போ ஓய்வு முடிவு வாபஸா?

தென்னாப்பிரிக்கா அணியின் இளம் நட்சத்திரம் குயின்டன் டிகாக், இந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் உட்சபட்ச பார்மில் இருக்கிறார். இதுவரை 3 சதங்களை இந்த உலக கோப்பை தொடரில் மட்டும் அடித்திருந்த டி காக், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் சதம் விளாசி அமர்களப்படுத்தியுள்ளார். அதாவது இந்த உலக கோப்பையில் மட்டும் அவர் விளாசியிருக்கும் மொத்த சதங்களின் எண்ணிக்கை 4 ஆகும். அத்துடன் இந்த உலக கோப்பையில் 500 ரன்களுக்கு மேல் அடித்தவர்களின் பட்டியலிலும் இணைந்திருக்கிறார். ஓர் உலக … Read more

Thangalaan: "ரஞ்சித், `தேள் கொண்டு வாங்கடா!' என்பார்" – மேக்கிங் குறித்து விக்ரம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பாரட்டுக்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், பா.ரஞ்சித், ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். இவ்விழாவில் பேசிய நடிகர் விக்ரம், தங்கலான் படத்தின் மேக்கிங் குறித்தும் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்தும் கலகலப்பாகப் பேசியிருந்தார். Thangalaan நம்ம இந்தியாவில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு, கெட்ட … Read more

நடத்துநர்கள் பயணிகளிடம்  சில்லறைக்காக நிர்ப்பந்திக்க போக்குவரத்துத்துறை தடை

சென்னை நடத்துநர்கள் பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்ப்பந்திக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. நடத்துநர்கள் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் டிக்கெட்டுக்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் என்று பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன. போக்குவரத்துத் துறை பேருந்துகளில் பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும் டிக்கெட்டுக்கு பயணிகள் அளிக்கும் பணத்தைப் பெற்று டிக்கெட் கட்டணம் போக மீதி தொகையை வழங்க வேண்டும் என்றும் நடத்துநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.. பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான … Read more