உங்கள் ஐபோனை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி…? சில டிப்ஸ் இதோ!

iPhone Hacking Alert: ஆப்பிள் சாதனங்கள் என்றாலே அவற்றை யாரும் ஹேக் செய்ய முடியாது, யாராலும் தவறாக பயன்படுத்த முடியாது என்பது அதன் டிரேட்மார்க். ஆனால், முக்கிய அரசியல் தலைவர்கள் உள்பட பல ஐபோன் வாடிக்கையாளர்கள் நேற்று (அக். 31) தங்கள் ஐபோன்களில் ஹேக்கிங் தொடர்பான ஒரு அறிவிப்பைப் பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  ​அவர்களின் சாதனங்களில் ‘அரசு உதவிபெறும் ஹேக்கர்களால்’ உங்கள் சாதனம் குறிவைக்கப்படலாம் என்று அந்த அறிவிப்பு கூறியுள்ளது. இதன் மீது காங்கிரஸ் மக்களவை … Read more

தீபாவளிக்கு பிறகு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: தீபாவளிக்கு பிறகு பொதுத்தேர்வு  குறித்த அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை  அன்பில் மகேஷ் கூறினார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளராக குமரகுருபரன்  நியமனத்தைத் தொடர்ந்து,  துறை சார்ந்த அறிமுகக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  பள்ளித் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகள் தொடர்பான அட்டவணை தீபாவளி பண்டிகை முடிந்ததும் வெளியிடப்படும் என்றார். மேலும்,  ‘டெட்’ தேர்வில் … Read more

நடிகை கவுதமியிடம் மோசடி.. பாஜக நிர்வாகி வீட்டில் 9 மணி நேரம் சோதனை.. 11 அறைகளுக்கு சிபிசிஐடி சீல்!

காரைக்குடி: நடிகை கவுதமியிடம் நில மோசடி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் அழகப்பன் வீட்டில் நேற்று சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 11 அறைகளுக்கு சீல் வைத்தனர். கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்தார் நடிகை கவுதமி. இவர் கடந்த 23 ஆம் தேதி பாஜகவிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவித்திருந்தார். மேலும் தனக்கு Source Link

The teenager was beaten to death in a fight at 1 foot | 1 அடி இடத்திற்கு சண்டை வாலிபர் அடித்து கொலை

1 அடி இடத்திற்கு சண்டை வாலிபர் அடித்து கொலை ஹெப்பகோடி: ஒரு அடி இடத்திற்காக ஏற்பட்ட சண்டையில், வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். பெங்களூரு ரூரல் ஹெப்பகோடியில் வசித்தவர் ரமேஷ், 27. இவரது மனைவி காவ்யா, 25. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரமேஷுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மோசஸ், 40, ஜோசப், 37, ஜெகதீஷ், 35 ஆகியோருக்கும், முன்விரோதம் இருந்தது. தாங்கள் வசித்து வந்த வீட்டை இடித்து, புதிய வீட்டை ரமேஷ் கட்டி வந்தார். … Read more

1978 தீபாவளி போட்டியில் சாதித்த ரஜினி, கமல்

1978ம் ஆண்டு இன்றைய முன்னணி சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருந்த காலம். இருவரும் தனித் தனி ஹீரோக்களாக நடிப்போம் என பேசி வைத்துக் கொண்டு நடிக்க ஆரம்பித்த காலம். 1978ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கமல்ஹாசன் நடித்த 'சிகப்பு ரோஜாக்கள்', ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த 'அவள் அப்படித்தான்', ரஜினிகாந்த் நடித்த 'தாய் மீது சத்தியம், தப்புத் தாளங்கள்', தெலுங்கு நடிகர் முரளி மோகன், ஸ்ரீதேவி நடித்த … Read more

லியோ மன்சூர் அலி கான் சீன் ரீஷூட் செய்யப்பட்டதா?.. விடாமல் அடிக்கும் ரஜினி ரசிகர்கள்.. என்ன ஆச்சு?

சென்னை: லியோ படத்தையே தோல்வி படம் என ரஜினி ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில், 540 கோடி வசூல் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டும் நம்ப மாட்டோம் என்றும் ஜெயிலர் வசூல் 700 கோடி என்றும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பொய் சொல்றாரு என அவருடைய பேட்டியை ட்ரோல் செய்த நிலையில், அந்த பர்ஸ்பெக்டிவ்

உணவுப் பற்றாக்குறை குறித்து வீணாக அச்சம் கொள்ள வேண்டாம் – கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத்

விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் மேலதிக அரிசி கையிருப்பைப் பேண முடிந்துள்ளதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத் தெரிவித்தார். இந்த நாட்டிற்கு தேவையான 40% பால் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஹேரத் இதனைக் குறிப்பிட்டார். இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத் மேலும் … Read more

தமிழகத்தை உலுக்கிய பல்லடம் நால்வர் கொலை வழக்கு; 800 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வந்த மோகன்ராஜ், அவரின் சகோதரர் செந்தில்குமார், மோகன்ராஜின் தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினம்பாள் ஆகியோர், கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர். இந்தக் கொலைச் சம்பவம் குறித்து பல்லடம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கையில், கள்ளக்கிணறு பகுதியில் வசித்த திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற ராஜ்குமார், அவரின் நண்பர்களான செல்லமுத்து, சோனை முத்தையா ஆகியோர் கள்ளக்கிணறு பகுதியிலுள்ள மோகன்ராஜின் தோட்டத்தில் … Read more

மக்களவை தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: எல்லைகளை கடந்து தமிழகத்தில் இந்திரா காந்தியைநேசிக்கும் கோடான கோடி மக்கள் இருக்கின்றனர். இதேபோல், இந்தியாவின் எல்லைகளை பலப்படுத்தியவர் வல்லபாய் படேல். இருவரும் வலிமையான அரசை உருவாக்குவதற்கான சிறந்த தலைவர்களாக இருந்தனர். காங்கிரஸ் காலத்தில் வாங்கிய கடனைவிட இப்போது மத்திய பாஜக அரசு அதிக கடன் வாங்கி உள்ளது. அவர்களுக்கு கடன் வாங்க உரிமை இருக்கிறது என்றால் தமிழக அரசுக்கு கடன் வாங்க … Read more

இந்தியா 25 ஆண்டில் வளர்ந்த நாடாகும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

கேவடியா: அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினம், தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதன்படி நாடு முழுவதும் நேற்றுஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது. குஜராத்தின் நர்மதை மாவட்டம், கேவடியாவில் அமைக்கப்பட்டுள்ள படேலின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று மரியாதை செலுத்தினார். அங்கு நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது: சுதந்திர தினம், குடியரசு தினத்தை போன்று தேசிய ஒற்றுமை தினமும் நாடு … Read more