சென்னை: சென்னையில் அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னையில் கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அயோத்திதாச பண்டிதர் திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திராவிட பேரொளி அயோத்திதாசர் 1845 மே 20ம் நாள் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள தேனாம்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றறிந்தார். சித்த மருத்துவம் பயின்று, சிறந்த சித்த மருத்துவராக விளங்கினார். […]
