டில்லி ஆளுநருக்கு சட்டத்தை முடக்க அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் முக்கியமாக, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கால வரம்பு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. […]