சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் நடத்துவதையொட்டி அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரண்யா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “குழந்தை திருமணங்களை தடுக்க இந்திய அரசு பல்வேறு கொள்கைகளையும், சட்டங்களையும் வகுத்துள்ளது. 1929-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் 1978-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, பெண்களுக்கான திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டது. இந்த வயது வரம்பை 21 ஆக உயர்த்தும் வகையில் கடந்த 2021-ம் […]