சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது. யஷ் நடிப்பில் கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலை அள்ளியது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சினிமா பிரியர்களையும் பிரம்பிப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வசூலில் 1000 கோடியை தொட்டது.