காயங்களுடன் களம் புகப்போகும் சஞ்சு சாம்சன்..! டிராவிட் கொடுத்த கடைசி வாய்ப்பு – விடிவுகாலம் கிடைக்குமா?

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இதில் சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டியில் விளையாடும் அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டிருப்பது பாராட்டை பெற்றிருக்கிறது. நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என பலரும் விருப்பப்பட்ட ஒரு வீரர் சாம்சன். அவருக்கு அணியில் இடம் கிடைத்திருப்பதற்கு ஒரு காரணம் பயிற்சியாளர் டிராவிட் என கூறப்படுகிறது.

அவர் ஓப்பனிங் இறகுவாரா? அல்லது மிடில் ஆர்டரில் ஆடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருக்கும் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக இருந்தாலும் அவருக்கு பதிலாக சாம்சன் அந்த பணியை மேற்கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியில் சாம்சன் ஒருவருக்கு தான் இதுவரை எந்த இடத்தில் விளையாடுவது என்ற தீர்மானம் இல்லை. அடிக்கடி அணியில் இருந்து வெளியேற்றப்படுவதால் அவருக்கு நிலையான இடம் இந்திய அணியில் இல்லை. 

அவ்வப்போது அணிக்குள் கொண்டுவரப்படுவதால் சாம்சனுக்கே கூட எந்த இடத்தில் விளையாடுவது என்ற குழப்பம் இருக்கிறது. மற்றவர்களுக்கு கொடுத்த வாய்ப்பு அளவுக்குகூட சாம்சனுக்கு கொடுக்கவில்லை. அதனால் கடும் அதிருப்தியில் இருந்த சஞ்சு சாம்சன் பொறுமையாகவே இருந்தார். தன்னுடைய அதிருப்தியை எங்கும் வெளிக்காட்டவில்லை. ஒவ்வொரு முறை வாய்ப்பு மறுக்கப்படும்போதும் இன்னும் கிரிக்கெட் பயிற்சிலேயே கவனம் செலுத்திய சாம்சன், இந்த முறை கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுதிதக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பெரும் போராட்டத்துக்குப்பிறகு அணிக்குள் இடம்பிடித்து வந்திருக்கும் சாம்சன், அவருக்கு போட்டியாக இருக்கும் இளம் வீரர்களைவிட நன்றாக ஆடி தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தன்னை எந்த இடத்தில் இந்திய அணி களமிறக்கினாலும் அந்த பொறுப்பை சரியாக செய்ய வேண்டிய கடமையில் சஞ்சு சாம்சன் இருக்கிறார். அவருக்கும் நன்றாக இது தெரியும் என்பதால் தென்னாப்பிரிக்கா தொடரை சாம்சனே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.