கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ, 2 கவுன்சிலர் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டோம்கால் தொகுதி எம்எல்ஏ ஜஃபிகுல் இஸ்லாம், கொல்கத்தா மாநகராட்சி கவுன்சிலர் பபாதித்யா தாஸ்குப்தா, பிதான்நகர் மாநகராட்சி கவுன்சிலர் தேப்ராஜ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.
கொல்கத்தா, முர்ஷிதாபாத், கூச் பெகார், மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது’’ என்றார்.