நவம்பர் 2023ல் டொயோட்டா கார் விற்பனை 51 % வளர்ச்சி – Toyota Sales Report November 2023

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் நவம்பர் 2023 மாதந்திர விற்பனை முடிவில் ஒட்டுமொத்தமாக 17,818 ஆக பதிவு செய்து முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 51% வளர்ச்சி அடைந்துள்ளது.

உள்நாட்டில் டொயோட்டா நிறுவனம் 16,924 ஆக பதிவு செய்துள்ள நிலையில், 894 ஹைரைடர் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

TKM Sales Report November 2023

நவம்பர் 2023-ல் மொத்தமாக 17,818 யூனிட்கள் விற்பனையாகி 51% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 11,765 யூனிட்களை விற்பனை செய்திருந்தது.

TKM ஒட்டுமொத்த வளர்ச்சி காலண்டர் ஆண்டு (CY) 2023க்கான ஒட்டுமொத்த விற்பனையுடன் தொடர்ந்து வேகத்தை அதிகரித்து 2,10,497 யூனிட்களை கடந்துள்ளது இதனால் 2022 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் விற்பனை 1,49,995 யூனிட்களாக இருந்ததை விட 40% அதிகரித்துள்ளதாக இந்நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மிக சிறப்பான முன்பதிவு ஆனது ஹைலக்ஸ், இன்னோவா ஹைக்ராஸ், ஃபார்ச்சூனர், லெஜெண்டர் போன்றவற்றுடன் அர்பன் க்ரூஸர் ஹைரைடருக்கு பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து இன்னோவா கிரிஸ்டா மாடலுக்கு அமோகமான வரவேற்ப்பும் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதவிர, வெல்ஃபயர், ரூமியன், கேம்ரி மற்றும் கிளான்ஸா மாடல்களும் வரவேற்பினை பெற்றுள்ளன.

டொயோட்டா நிறுவனம் நவம்பர் 11-19 ஆம் தேதி வரை வருடாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டரின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் அதுல் சூட் கூறுகையில், நவம்பர் 2023ல், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 51% மொத்த விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம். எதிர்கால செயல்திறனை மேம்படுத்துவதற்கும், உயர்ந்த தரத்தின் தரத்தை உறுதி செய்வதற்கும், பராமரிப்பின் ஒரு பகுதியாக, ஒரு வார கால திட்டமிடப்பட்ட நிறுத்தம் இருந்தபோதிலும் இது விற்பனை எண்ணிக்கை சாத்தியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டொயோட்டா தனது மூன்றாவது ஆலையை ரூ.3,300 கோடி முதலீட்டில் துவங்குவதாக அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.