சென்னை சென்னையில் நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னையில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வகுப்புக்கள் நடைபெறுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசின் முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
