நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான வங்காளதேச கிரிக்கெட் அணி அறிவிப்பு!

டாக்கா,

வங்காளதேச அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் வங்காளதேசம் அடுத்ததாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அங்கு அந்நாட்டிற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வங்காளதேச அணிக்கு நஜ்முல் ஹொசைன் சாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். லிட்டன் தாஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

அணி விவரம் பின்வருமாறு;-

ஒருநாள் அணி; நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், அனாமுல் ஹக் பிஜோய், தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், அபிப் ஹொசைன் துருபோ, சௌமியா சர்க்கார், மெஹிதி ஹசன் ஹசன் மிராஸ், தஜித் ஹசன் தமீம், தகிஸ்ரிம், ஷோகிஸ்ரிம் இஸ்லாம் ஹசன் மஹ்மூத், ரிஷாத் ஹொசைன், ரகிபுல் ஹசன்

டி20 அணி; நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), லிட்டன் தாஸ், ரோனி தாலுக்தார், தவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், அபிப் ஹொசைன் துருபோ, சௌம்யா சர்க்கார், மெஹிதி ஹசன் மிராஸ் ஷக் மஹேதி ஹசன், முஸ்தாபிஸுர் ரஹ்மான், ஷோத்ரிமுத் ரஹ்மான், , தன்வீர் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்

இந்த தொடருக்கான போட்டி அட்டவணை விவரம் பின்வருமாறு;-

ஒருநாள் போட்டிகள்;

1வது போட்டி – டிசம்பர் 17

2வது போட்டி – டிசம்பர் 20

3வது போட்டி – டிசம்பர் 23

டி20 போட்டிகள்;

1வது போட்டி – 27 டிசம்பர்

2வது போட்டி – 29 டிசம்பர்

3வது போட்டி – டிசம்பர் 31


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.