மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை வேண்டாம் : த்ரிஷா
நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசி வில்லங்கத்தில் சிக்கினார் நடிகர் மன்சூர் அலிகான். இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்படி சென்னையில் மன்சூர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மன்சூர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். தொடர்ந்து மன்னிப்பு கோரினார். த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக த்ரிஷாவிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் அழைத்து இருந்தனர். ஆனால் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரிவிட்டதால், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல்துறை அனுப்பிய கடிதத்துக்கு நடிகை திரிஷா பதில் தெரிவித்துள்ளார்.