ராஜஸ்தானில் காங்கிரசை முந்துகிறது பாஜக:தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் தற்போது முதல்-மந்திரியாக அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தை பொறுத்தவரைக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் எப்போதுமே நேரடி போட்டி நிலவி வருகிறது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் இரு மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் மாதம் 25ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக 199 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்தததால் ஒத்திவைக்கப்பட்டது. 199 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 75% வாக்குகள் பதிவானது. ராஜஸ்தான் மாநிலத்தில் இவ்வளவு அதிகமான வாக்குகள் பதிவானது வியப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் இன்று நடந்து முடிந்த நிலையில், ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்புகளை பிரபல செய்தி ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த இடங்கள் 199 ஆகும். இதில் பெரும்பான்மையாக பிடிக்க வேண்டிய இடங்கள் 101.

கருத்து கணிப்பு முடிவுகளின் விவரம் வருமாறு;

சிஎன்என் நியூஸ்18: பாஜக- 111, காங்கிரஸ்- 74, மற்றவை-14

ஜன் கி பாத்: 100- 122, காங்கிரஸ் 62-85, மற்றவை14-15

பி- மார்க்யூ: பாஜக 101- 125, காங்கிரஸ் 69-81, மற்றவை 05-15

பால்ஸ்டிராட்: பாஜக 100-110, காங்கிரஸ் 90-100, மற்றவை 05-15

டைம்ஸ் நவ்: பாஜக 108- 128, காங்கிரஸ் 56-72, மற்றவை13- 21

இதையடுத்து, ராஜஸ்தானில் பாஜக கட்சி முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

ராஜஸ்தானில் பாஜக சார்பில் முதல்-மந்திரி வேட்பளார் என்று பார்த்தால் வசந்த்ரா ராஜே தான். இவர் தமிழ்நாட்டின் கொடைக்கானலில் உள்ள பிரசன்டேசன் கான்வென்ட் பள்ளியில் படித்தவர். இவர் ஏற்கனவே ராஜஸ்தானில் முதல்-மந்திரியாக இருந்துள்ளார். எனவே பாஜக வெற்றி பெற்றால் இவர் மீண்டும் முதல்-மந்திரியாக அதிக வாய்ப்பு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.