ரீ ரிலீஸில் சாதனை செய்த தனுஷ் படம்
நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த புதுப்பேட்டை, வட சென்னை ஆகிய படங்களை தொடர்ந்து சமீபத்தில் '3' படத்தை தமிழகத்தில் ரீ ரிலீஸ் செய்தனர். சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் தனுஷ் நடித்து கடந்த 2012ம் ஆண்டில் வெளிவந்த '3' படத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ. 49-க்கு திரையிட்டனர்.
இதுவரை கமலா தியேட்டரில் 3 படம் ரீ ரிலீஸில் 50,000 டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளதாக தியேட்டர் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளனர். இது ரீ ரிலீஸ் ஆன படங்களில் புதிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னையில் அரவிந்த், ஜி.கே, கெசினோ, நேஷனல், எஸ்.கே.மார்லின், ரெமி ஆகிய திரையரங்குகளில் இப்போது 3 படத்தை திரையிட்டுள்ளனர்.