விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ட்ரெயின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்
இயக்குனர் மிஷ்கின் பிசாசு 2 படத்தை இயக்கி உள்ளார். ஆனால் அப்படம் இதுவரை வெளியாகவில்லை. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு கெஸ்ட் ரோல் நடித்திருந்தார். அதன் பிறகு தனது தம்பி ஆதித்யா இயக்கிய டெவில் என்ற படத்திற்கு இசையமைத்த மிஷ்கின், மாவீரன், லியோ உள்ளிட்ட சில படங்களிலும் வில்லன் வேடங்களில் நடித்தார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் சேதுபதி நடிப்பில் ட்ரெயின் என்ற படத்தை அவர் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ட்ரெயின் என்று டைட்டில் வைத்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்தது. அதனால் ட்ரெயின் என பெயரிட்டுள்ளனர். நாயகியாக டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள். மிஷ்கினே இசையமைக்க, பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.