ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் நவம்பர் 2023 மாதந்திர விற்பனை முடிவில் 65,801 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தை விட 3 % வளர்ச்சி அடைந்துள்ளது.
உள்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் 49,451 யூனிட்களை விற்பனை செய்துள்ள நிலையில் முந்தைய ஆண்டு இதே மாத விற்பனையான 48,002 யூனிட்களை விட 3% அதிகமாகும். ஏற்றுமதி எண்ணிக்கை 16,530 ஆகும்.
Hyundai India Sales Report November 2023
நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கை குறித்து, ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சிஓஓ தருண் கர்க் கூறுகையில், “ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் எஸ்யூவி தொடர்ந்து வலுவான வேகத்தை வெளிப்படுத்துகிறது, எங்கள் ஒட்டுமொத்த விற்பனையில் 60% பங்களிக்கிறது. எங்களின் ஹூண்டாய் எக்ஸ்டர் 100,000 முன்பதிவுகளில் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
மேலும் சமீபத்தில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார் ஒட்டுமொத்தமாக 1000 யூனிட்டுகளும் விற்பனை ஆகியுள்ளது.