2024ம் ஆண்டை உற்பத்தி விளைச்சலை அதிகரிக்கும் ஆண்டாகக் கருதி செயற்படுவோம்… – பிரதமர் தினேஷ் குணவர்தன

மஹரகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2023.11.29 அன்று மஹரகம பிரதேச செயலகத்தில் குழுவின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு உற்பத்தி விளைச்சலை அதிகரிக்கும் ஆண்டாகக் கருதப்படுவதால், அது தொடர்பான திட்டங்களைச் செயற்படுத்துமாறு கமநலச் சேவைகள் உதவி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை வழங்கினார். குறிப்பாக உணவுப் பயிர்கள் மற்றும் ஏற்றுமதி பயிர்கள் மீது அதிக கவனம் செலுத்துவது குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார்.

சட்டவிரோதமாக வயற்காணிகளை நிரப்புதல் தொடர்பான குழுவின் அறிக்கை மேலும் தாமதமாகி வருவது குறித்து கவனம் செலுத்திய பிரதமர், தனிநபர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கமநலச் சேவைகள் சட்டத்தின் நோக்கங்களை அடைந்துகொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மஹரகம சாசனாரக்ஷ பலமண்டலயவின் தலைவர் சங்கைக்குரிய நிகபோத சந்திர ஜோதி தேரர், மஹரகம பிரதேச செயலாளர் தில்ருக்ஷி வல்பொல, முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிகார, சுலோச்சன கமகே மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.