நாடியாட், குஜராத்தில், கெட்டுப்போன ஆயுர்வேத ‘சிரப்’ குடித்த ஐந்து பேர் கடந்த இரண்டு நாட்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தின் நாடியாட் நகர் அருகேயுள்ள பிலோடாரா கிராமத்தைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவர், ஆயுர்வேத சிரப் எனப்படும் திரவ மருந்து விற்பனை செய்து வருகிறார்.
‘கால்மேகசப் – ஆசவா அரிஷ்டா’ என்ற பெயரிலான அந்த ஆயுர்வேத சிரப்பை அவர் 50க்கும் மேற்பட்டோருக்கு விற்பனை செய்துள்ளார்.
இதை குடித்த ஐந்து பேர் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான புகாரின்படி கடைக்காரர் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த ஆயுர்வேத சிரப்பை குடித்த ஒருவரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதில், ‘மீத்தைல் ஆல்கஹால்’ என்ற விஷத்தன்மை வாய்ந்த பொருள் கலந்திருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement