துபாய்: பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான் மற்றும் ஐ.நா., பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டெரஸ்,நெதர்லாந்து பிரதமர், பஹ்ரைன் அரசர் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்தார்.
சி.ஓ.பி 28 எனப்படும் ஐ.நா.வின் பருவநிலை உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று பிரதமர் மோடி துபாய் புறப்பட்டு சென்றார். இந்த மாநாடு துவங்குவதற்கு முன்னதாக உலக தலைவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக, யுஏஇ அதிபர் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான் மற்றும் ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டெரஸ் ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே, பஹ்ரைன் அரசர் ஹமாத் பின் ஐசா அல் கலிபா, உஜ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்காத் மிர்ஜியோவேவ், தஜிகிஸ்தான் அதிபர் இமோமாலி ரஹ்மோன், ஜோர்டான் அரசர் இரண்டாம் அப்துல்லா உள்ளிட்ட உலக தலைவர்களையும் மோடி சந்தித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement