வரும் டிசம்பர் 14 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள கியா மோட்டார் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டீசரை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் உள்ள வென்யூ காரின் பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்ளும் மாடலாகும்.
ஏற்கனவே வென்யூ மாடல் ADAS பாதுகாப்பு நுட்பத்தை பெற்றதாக விளங்கும் நிலையில், இரண்டாவது மாடலாக சோனெட் விளங்க உள்ளது.
2024 Kia Sonet
வெளியிடப்பட்ட டீசர் மூலம் 2024 கியா சொனெட் ஃபேஸ்லிஃப்டில் முன்புற எல்இடி ஹெட்லைட் பெரிதாக மாற்றமில்லாமல் எல்இடி ரன்னிங் விளக்குகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. செங்குத்தான பனி விளக்குடன் புதிய பம்பரை முன்புறத்தில் பெறுகின்றது.
இண்டிரியரில் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் புதிய பெரிய 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் பல்வேறு வசதிகள் பெற உள்ளது. புதிய அம்சங்களில், 360 டிகிரி கேமராவும், ADAS தொகுப்பும் இருக்கலாம்.
போஸ் சவுண்ட் சிஸ்டம், இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் தானியங்கி காலநிலை கட்டுப்பாடு போன்றவற்றை பெறக்கூடும்.
ADAS தொகுப்பில் முன்புற மோதல் எச்சரிக்கை, லேன் புறப்படும் எச்சரிக்கை, முன்னோக்கி மோதல் தவிர்ப்பு உதவி மற்றும் எச்சரிக்கை, ஹை பீம் அசிஸ்ட், லேன் கீப்பிங் உதவி மற்றும் பல வசதிகள் பெறலாம்.
என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல், 83hp பவர் வழங்குகின்ற 1.2-லிட்டர் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜினில் , 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
120hp பவர் மற்றும் 172 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் T- GDi டர்போ பெட்ரோல் என்ஜின் 6 வேக ஐஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக டிசிடி மட்டுமே பெறுகின்றது.
1.5 லிட்டர் CRDi டீசல் என்ஜின் கொண்ட 116 hp பவர் மற்றும் 240 Nm டார்க் வழங்குவதுடன் fixed-geometry-turbo நுட்பத்தை கொண்டு 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது மற்றும் 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மாடல் உள்ளது.
2024 கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அடுத்த ஆண்டின் முதல் வாரத்தில் விலை அறிவிக்கப்படுவதுடன் டெலிவரியும் துவங்கப்படலாம். சொனெட் போட்டியாளர்களாக டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, நிசான் மேக்னைட், ரெனோ கிகர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ், வரவிருக்கும் டொயோட்டா டைசோர் ஆகியவை உள்ளன.