Pujaris who sang saranam in response to padi pooja | படி பூஜைக்கு பதில் சரணம் பாடிய பூஜாரிகள்

சபரிமலை:சபரிமலையில் படி பூஜை நடக்காத நாட்களில் மலை தேவதைகளை வணங்கும் வகையில் மேல்சாந்தி மற்றும் பூஜாரிகள் சரணம் பாடினர்.

படி பூஜை நேரத்தில் நீண்ட நேரம் பக்தர்கள் படி ஏற முடியாது என்பதால் மண்டல மகர விளக்கு காலத்தில் படி பூஜை நடைபெறுவதில்லை. மகரஜோதிக்கு பின்னர் நான்கு நாட்கள் மட்டும் படி பூஜை நடக்கும். மாத பூஜைக்காக நடை திறக்கும் போது எல்லா நாட்களிலும் படி பூஜை உண்டு. 18 மலைகளில் குடி கொண்டுள்ள மலை தேவதைகளை திருப்திப்படுத்தும் வகையில் படி பூஜை நடக்கிறது.

எனவே படி பூஜை இல்லாத நாட்களில் மலை தேவதைகளை திருப்திப்படும் வகையில் தந்திரி தலைமையில் மேல் சாந்தி மற்றும் பூஜாரிகள் கொடிமரம் அருகே நின்று 18 மலை தேவதைகளின் பெயர் கூறி சரணம் பாடுகின்றனர். பின்னர் 18 வது படியில் கற்பூரம் ஏற்றி அதன் பக்கத்தில் உள்ள மணியை ஒலிக்க செய்வர். எல்லா நாளும் இரவு அத்தாழ பூஜை நேரத்தில் இந்த சடங்கு நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.