Tata motors Sales – நவம்பர் 2023ல் டாடா மோட்டார்ஸ் விற்பனை 1.73 % சரிந்தது

இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நவம்பர் 2023ல் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 74,172 ஆக பதிவு செய்துள்ளது. 2022 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 75,478 ஆக பதிவு செய்துள்ளது.

உள்நாட்டில் 2022 நவம்பரில் 73,467 யூனிட்களுடன் ஒப்பிடும்போது மொத்த உள்நாட்டு விற்பனை கடந்த மாதம் 72,647 யூனிட்டுகளாக இருந்த டாடா மோட்டார்ஸ் விற்பனை 1 % சரிந்துள்ளது.

Tata Motors Sales Report November 2023

டாடாவின் பயணிகள் வாகன ஒட்டுமொத்த விற்பனை 46,143 யூனிட் மட்டும் பதிவு செய்துள்ளது இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 46,425 யூனிட்களாக இருந்ததுள்ளது. இதன் மூலம் 1 சதவீதம் குறைந்துள்ளது.

மற்றபடி, எலக்ட்ரிக் வாகன விற்பனை 4,451 யூனிட்களிலிருந்து 4,761 யூனிட்களாக அதிகரித்துள்ளதால் 7 சதவீதம் வளர்ச்சி என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 2023 முடிவில் ஒட்டுமொத்த வணிக வாகனங்கள் விற்பனை 28,029 யூனிட்களாக இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 29,053 யூனிட்களாகும். எனவே 4 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் உள்நாட்டு விற்பனை 3 சதவீதம் குறைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.