This weeks benefit and remedy for 12 zodiac signs! | 12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை(01.12.2023 முதல் 07.12.2023) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன்? உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்

கேது நன்மைகளை வழங்குவார். சூரிய பகவானை வணங்கி வழிபட வளம் உண்டாகும்.

அசுவினி: உங்கள் நட்சத்திர நாதனின் ஆறாமிட சஞ்சாரத்தால் இதுவரை இருந்த நெருக்கடி ஒவ்வொன்றாக விலகும், வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். உடல் ஆரோக்கியமடையும், வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

பரணி: உங்கள் நட்சத்திர நாதன் ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் உங்கள் கவனம் சிதறும். செய்துவரும் தொழிலில் அக்கறை இல்லாமல் போகும். பண நெருக்கடி விலகும். நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.

கார்த்திகை 1ம் பாதம்: உங்கள் நட்சத்திர நாதனும் ராசி நாதனும் மறைவு பெறுவதால் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். அரசு வழி முயற்சி இழுபறியாகும். உங்கள் செல்வாக்கிற்கு சில சங்கடம் ஏற்படும் என்பதால் செயல்களில் எச்சரிக்கை அவசியம். ஆறாமிட கேதுவால் சில அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

ராகு நன்மைகளை வழங்குவார். குல தெய்வத்தை வணங்கி வழிபட வாழ்க்கை வளமாகும்.

கார்த்திகை 2,3,4: லாப ஸ்தான ராகுவால் உங்கள் வாழ்க்கையில் இருந்த நெருக்கடி நீங்கும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும், வரவு அதிகரிக்கும். புதிய முயற்சி லாபமாகும்.

ரோகிணி: உங்கள் நட்சத்திரநாதன் வாரம் முழுவதும் உங்களுக்கு சாதகத்தை வழங்கிடும் நிலையில் சஞ்சரிப்பதுடன், ராகு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருக்கடி விலகும். பொருளாதார வரவில் இருந்த தடை நீங்கும். வீண் செலவு கட்டுப்படும்.

மிருகசீரிடம் 1,2: கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சந்திரனின் அருளால் உங்கள் செயல்களில் முன்னேற்றம் தோன்றும். பொருளாதார பிரச்னை நீங்கும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். வழக்குகளில் இருந்து வெளியில் வருவீர்.

மிதுனம்

சுக்கிரன், சூரியன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் போக்கும்.

மிருகசீரிடம் 3,4: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும் செவ்வாயும் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவர். நெருக்கடி நீங்கும். அரசு வழி முயற்சி ஆதாயமாகும். வியாபாரத்தை விரிவு செய்வீர். வருமானம் அதிகரிக்கும்.

திருவாதிரை: உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். சட்ட ரீதியான ஏற்பட்ட சிக்கல் விலகும். அரசு வழி முயற்சி ஆதாயமாகும்.

புனர்பூசம் 1,2,3: ஐந்தாமிட சுக்கிரனும் ஆறாமிட சூரியனும் செவ்வாயும் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவர். இடம் வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதிய செயல்களில் ஆதாயம் ஏற்படும்.

கடகம்

கேது நன்மைகளை வழங்குவார். நவக்கிரக வழிபாடு நலம் தரும்.

புனர்பூசம் 4: மூன்றாமிட கேது பகவான் உங்கள் தைரியத்தை அதிகரிப்பார். முயற்சிகளில் வெற்றியை உண்டாக்குவார். சகோதரர்கள் வழியில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

பூசம்: நீண்ட நாள் பிரச்னை முடிவிற்கு வரும். மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் முன்னேற்றம் உண்டாகும். விருப்பம் நிறைவேறும். முயற்சி வெற்றியாகும், அரசு வழியில் ஏற்பட்ட சிக்கல் விலகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

ஆயில்யம்: உங்கள் எதிர்பார்ப்பு இந்த வாரத்தில் நிறைவேறும். பண வரவு அதிகரிக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். உத்தியோகஸ்தர்களின் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் எண்ணம் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்

சுக்கிரன், சனி நன்மைகளை வழங்குவர். விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட பிரச்னை விலகும்.

மகம்: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சனியால் முயற்சி வெற்றியாகும். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த வருமானம் வரும், தொழில் உத்தியோகத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

பூரம்: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திர நாதனால் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். ஆறாமிட சனியால் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சிகளில் லாபம் ஏற்படும். எதிர்பார்த்த வருமானம் வரும்.

உத்திரம் 1: உங்கள் ராசி நாதனும் பாக்யாதிபதியும் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். என்றாலும், ஆறாமிட சனியால் அனைத்தையும் சமாளித்து நீங்கள் நினைத்ததை அடைவீர்.

கன்னி

சுக்கிரன், சூரியன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். ராமநாத சுவாமியை வழிபட வளம் உண்டாகும்.

உத்திரம் 2,3,4: தன ஸ்தான சுக்கிரனும் தைரிய ஸ்தான செவ்வாய் சூரியனும் ஆதாயத்தை வழங்குவர். எதிர்பார்த்த வருமானம் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். ஜென்ம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.

அஸ்தம்: உங்கள் நட்சத்திராதிபதி வாரத்தின் முதல் மூன்று நாட்களும் ஆதாயத்தை வழங்குவார். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நெருக்கடி விலகும். இரண்டாமிட சுக்கிரனால் முயற்சிகளில் லாபம் உண்டாகும் வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

சித்திரை 1,2: சுக்கிரன், சூரியன்,செவ்வாயின் சஞ்சார நிலைகளால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் சாதுரியமாக செயல்பட்டு சிறப்படைவீர். திங்கள் செவ்வாயில் செலவு அதிகரிக்கும்.

துலாம்

சுக்கிரன், ராகு நன்மையை வழங்குவர். மகாலட்சுமியை வணங்கி வழிபட வளம்

சித்திரை 3,4: உங்கள் ராசிநாதன் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் எண்ணம் பூர்த்தியாகும். செயல் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தடைபட்டிருந்த வேலை நடைபெறத் தொடங்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.

சுவாதி: கடந்த கால சங்கடம் நீங்கும். வாரம் முழுவதும் சந்திரனும், சுக்கிரனும், ராகுவும் உங்கள் செயல்களில் லாபத்தை உண்டாக்குவர். ஆரோக்கியம் சீராகும். முயற்சி பலிதமாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். போட்டியாளர் விலகிச்செல்வர்.

விசாகம் 1,2,3: ஜென்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் சுக்கிரனால் உங்கள் திறமை அதிகரிக்கும். செயல்களில் வேகமும் விறு விறுப்பும் இருக்கும். சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் செல்வாக்கு உயரும். சங்கடம் தீரும். எதிர்ப்பு விலகும், வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

சனி, கேது, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். காளிகாம்பாளை வழிபட வளமுண்டாகும்.

விசாகம் 4: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிரி விலகிச் செல்வர். உங்கள் ராசிநாதன் ஆட்சி பலம் பெற்றிருப்பதால் துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.

அனுஷம்: உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியும் ராசிக்குள்ளாகவே சஞ்சரிப்பதால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு நிலையான சொத்துகளை விற்கும் நிலை ஏற்படும். மற்றவரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் உண்டாகும்.

கேட்டை: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வருமானத்தில் இருந்த தடை விலகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வேலையில் புதிய பொறுப்பு உண்டாகும். தடைபட்டிருந்த செயல் நடக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். வெள்ளி அன்று செயல்களில் சிரமம் தோன்றும்.

சந்திராஷ்டமம்

29.11.2023 அதிகாலை 2:46 மணி – 1.12.2023 காலை 11:37 மணி

தனுசு

சந்திரன், சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். அனுமனை வழிபட பிரச்னை விலகும்.

மூலம்: ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திர நாதனால் திட்டமிட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் முயற்சி நிறைவேறும். எதிர்ப்பு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். லாப சுக்கிரனால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வெள்ளி சனியில் சந்திராஷ்டமம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

பூராடம்: சுக ஸ்தானத்தில் ராகு, விரய ஸ்தானத்தில் சூரியனும் செவ்வாயும் சஞ்சரிப்பதால் செயல்களில் சங்கடமும் முயற்சியில் இழுபறி உண்டாகும். அரசு பணியாளர்கள், அரசியல்வாதிகள் இக்காலத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். சனி, ஞாயிறில் சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம் தேவை.

உத்திராடம் 1: உங்கள் நட்சத்திர நாதன் மறைவு பெற்றிருப்பதுடன் ராசிநாதனும் வக்கிரம் அடைந்திருப்பதால் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். தொழில், உத்தியோகத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறாமல் போகும். குடும்பத்திலும் சங்கடம் தோன்றும். ஞாயிறு அன்று செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டமம்

1.12.2023 மதியம் 11:48 மணி – 3.12.2023 இரவு 10:25 மணி

மகரம்

ராகு, சுக்கிரன், சூரியன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். கபாலீஸ்வரர் அருளால் சங்கடம் நீங்கும்.

உத்திராடம் 2,3,4: கடந்த வார சங்கடம் குறையும். நீங்கும். மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும், செயல்கள் லாபமாகும். லாப செவ்வாயால் பண வரவு அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். ஞாயிறு திங்களில் சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம் அவசியம்.

திருவோணம்: உங்கள் ராசிக்குள் சனி பகவான் சஞ்சரிப்பதால் செயல்களில் கவனம் தேவை. மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் முயற்சி வெற்றியாகும். துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். திங்கள் செவ்வாயில் சில நெருக்கடி தோன்றும்.

அவிட்டம் 1,2: லாப ஸ்தான சூரியன் செவ்வாயால் எதிர்பார்த்த வருமானம் வரும். உங்கள் முயற்சி லாபமாகும்.வியாபாரம் தொழிலில் இருந்த தடை விலகும். ஒரு சிலர் புதியதாக இடம், வீடு வாங்குவீர். புதிய தொழில் தொடங்க சிலர் திட்டமிடுவீர்கள். செவ்வாய் புதனில் விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டமம்

3.12.2023 இரவு 10:26 மணி – 6.12.2023 மாலை 4:12 மணி

கும்பம்

சுக்கிரன், சூரியன் நன்மைகளை வழங்குவர். வராகியை வழிபட வளம் கூடும்.

அவிட்டம் 3,4: குடும்ப ஸ்தானத்தில் ராகு, ஆயுள் ஸ்தானத்தில் கேது, விரய ஸ்தானத்தில் சனி என்று சஞ்சரிப்பதால் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை இக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. புதன் அன்று சில சங்கடம் தோன்றும்.

சதயம்: ராகு, கேது, செவ்வாய், சனி என்று உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கினாலும் பாக்ய சுக்கிரனும், ஜீவனஸ்தான சூரியனும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். அரசு வழி செயல்களில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாழன் அன்று செயல்களில் நெருக்கடி உண்டாகும்.

பூரட்டாதி 1,2,3: அரசு வழியில் உண்டான நெருக்கடி விலகும். உங்கள் முயற்சி லாபமாகும் என்றாலும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எதிரிகளின் கை மேலோங்கும். உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.

சந்திராஷ்டமம்

6.12.2023 மாலை 4:13 மணி – 8.12.2023 இரவு 8:56 மணி.

மீனம்

சுக்கிரன், சனி நன்மையை வழங்குவர். திருவாலங்காடு காளியை வழிபட சங்கடம் குறையும்.

பூரட்டாதி 4: உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவால் மனதில் குழப்பம் அதிகரிக்கும், வாழ்க்கைத் துணையுடன் சங்கடம் தோன்றும். எதிர்பாலினரால் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும் கவனமாக செயல்படுவது நல்லது.

உத்திரட்டாதி: ராசிநாதன் குரு குடும்ப ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். லாப சனியால் எதிர்பார்த்த வரவு உண்டாகும். ஏழாமிடத்தில் கேது சஞ்சரிப்பதால் நண்பர்களிடம் எச்சரிக்கையும், செயல்களில் விழிப்புணர்வும் அவசியம்.

ரேவதி: உங்கள் முயற்சி எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு லாப சனி உங்களுக்கு நன்மைகளை வழங்குவார். பொருளாதார நிலை உயரும். ஜென்ம ராசிக்குள் ராகு, ஏழில் கேது என்ற நிலையால் எதிர்பாராத சங்கடங்களும் நெருக்கடிகளும் ஏற்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.