ராய்ப்பூர்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகள் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கெய்க்வாட் களம் இறங்கினர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 37 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன், சூர்யகுமார் யாதவ் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ரிங்கு சிங் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்தார். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கெய்க்வாட் 32 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து ரிங்கு சிங்குடன் ஜித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் சர்மா 35 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய அக்சர் படேல் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் 46 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆட உள்ளது.