அரச துறையுடன் மூன்று கம்பனிகள் எரிபொருள் விநியோகத்தில் போட்டிவயிடுவதுடன் நீண்ட மற்றும் இடைக்காலத்தில் எரிபொருள் சந்தையை சிறந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்ன்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் (06) போது உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
சந்தையில் காணப்பட்ட சர்வாதிகாரத் தன்மை மாற்றமடைந்து சந்தையில் போட்டியிடுவதற்கு ஏதேனும் காலமெடுக்கும் என்பதுடன் அங்கு எதிர்காலத்தில் மாற்றமான பெறுபேறு கிடைக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதில் எமது நாட்டிற்கு ஏற்பட்ட பயங்கரமான நிலையை நீக்கியமையை நினைவூட்டிய அமைச்சர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐ ஓ சி மாத்திரம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகமானவை ஏற்றுமதியின் போது டொலர் பற்றாக்குறைக்கு எதிர்கொள்ள வேண்டி ஏற்படின் முழு நாட்டிற்கும் எரிபொருள் இல்லாது போகலாம் என்றும் அதனால் சந்தையில் நுகர்வோருக்கு பாரிய அசாதாரணம் மற்றும் அழுத்தம் ஏற்படும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையை இல்லாது செய்வதற்காக இவ்வாறு மூன்று கம்பனிகள் போட்டியாளர்களாக அரச துறையுடன் செயற்படுவதாகவும் தெளிவுபடுத்தினார்.
இலங்கை எரிபொருள் விலையைத் தீர்மானிப்பதல்ல மாறாக விலை கிடைக்கப்பெறுவதாகவும் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன உலக சந்தையில் ஏற்படும் எரிபொருள் விலை மாற்றம் மற்றும் நாணய மாற்று வீதத்தில் ஏற்படும் மாற்றம் என்பவற்றுக்கு இணங்க எரிபொருள் விலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது போகும் என்பதுடன், அவ்விடயங்கள் 02இற்கு இணங்க நாட்டில் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.