ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரான லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் ரிவோல்டோ சூப்பர் கார் விற்பனைக்கு ரூ.8.89 கோடியில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.
இந்திய சந்தையில் முதல் மாடல் அடுத்த சில வாரங்களுக்குள் டெலிவரி வழங்கப்பட உள்ளதாக லம்போர்கினி குறிப்பிட்டுள்ளது.
Lamborghini Revuelto
லம்போர்கினி ரிவோல்டோ சூப்பர் காரில் உள்ள 6.5-லிட்டர் L545 V12 என்ஜின் உடன் மூன்று எலக்ட்ரிக் மோட்டாருடன் 3.8kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 825hp பவர் மற்றும் 725Nm டார்க் வெளிப்படுத்துடன் கூடுதலாக உள்ள 148 bhp பவர், பின் எஞ்சின் 295 bhp பவரை வழங்குவதுடன் மொத்தமாக 1,015hp பவர் மற்றும் 807Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
8-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் பவர் நான்கு சக்கரங்களுக்கும் வழங்கப்படுகிறது. ரிவோல்டோ மாடல் 2.5 வினாடிகளில் 0-100 kmph வேகத்தை எட்டும் மற்றும் டாப் ஸ்பீடு 350 kmph ஆகும்.
லம்போர்கினி Revuelto சூப்பர் கார் 2026 வரை விற்றுத் தீர்ந்துவிட்டதாக லம்போர்கினி அறிவித்தது. அதேநேரம், இந்தியப் பிரிவுக்கு சில மாடல்களை ஒதுக்கியுள்ளது.