Self-reliant India: Art culture should be encouraged: Prime Minister Modi | கலை பண்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர்

புதுடில்லி: இன்றைய உலகில் கலை பண்பாட்டை நாம் ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

டில்லி செங்கோட்டையில் தற்சார்பு இந்தியா வடிவமைப்பை திறந்து வைத்த பிரதமர் கூறியதாவது:கலை எந்த வடிவத்தில் இருந்தாலும், அது எப்போதும் இயற்கையுடன் நெருக்கமாகப் பிறக்கிறது… கலை என்பது இயற்கைக்கு சார்பானது, சுற்றுச்சூழலுக்கும், காலநிலைக்கும் ஆதரவானது.

இன்றைய உலகில் கலை பண்பாட்டை நாம் ஊக்குவிக்க வேண்டும். சர்வதேச அருங்காட்சியக் கண்காட்சி, நூலகங்களின் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் ஊக்குவிப்போம்.இலக்கை அடையும்வகையில் , ‘ஆத்மநிர்பர் பாரத்’ வடிவமைப்பு மையம் திறக்கப்பட்டது. இந்த மையம் நாட்டிலுள்ள தனித்துவமான மற்றும் அரிய கைவினைப் பொருட்களுக்கான மேடையை வழங்கும்.. என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.