வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: 2024 அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடுவது உறுதி என ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் கடந்த 1999ம் ஆண்டு டிசம்பரில் அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சின் பதவி விலகவே, தற்காலிக அதிபராக விளாடிமிர்புடின் பதவி ஏற்றார். 2000-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரப்பூர்வ அதிபராக பொறுப்பேற்றார். இவரது பதவி காலம் 2024 மே மாதம் நிறைவடைகிறது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் தேர்தலை 2024ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி நடத்துவது என பாராளுமன்ற மேல்சபை கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது.
இதையடுத்து அதிபர் புடின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2024 அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடுவது உறுதி என தெரிவித்துள்ளதாக அவரது கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.. இதன் மூலம் புடின் 5-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement