கூகுள் தனது புதிய AI மாதிரியான ஜெமினியை அறிவித்துள்ளது. இது மந்திரக்கோலை மறைக்கும் மாயாஜாலக் காட்சிகளைக் கண்டுபிடிக்கலாம், கணக்கியல் தேர்வில் வெற்றி பெறலாம், ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தின் கீழ் இருந்து ஒரு துண்டு காகிதத்தை கண்காணிக்கலாம், மற்றும் ஒரு புள்ளி-க்கு-புள்ளி படம் வரையப்பட்ட பிறகு அது ஒரு நண்டு என்று முடிவு செய்யலாம். இருப்பினும், தொழில்நுட்ப ரீதியாக, கூகுள் இன்னும் ஓபன்ஏஐயை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சாட்ஜிபிடியின் வெர்சன்களை தான் கூகுள் பின்பற்றிக் கொண்டே இருக்கிறதே தவிர, ஓபன் ஏஐ கூகுள் ஏஐ-ஐ பின்பற்றவில்லை. சாட்ஜிபிடி அப்டேட் வெர்சன்கள் வெளியான பிறகு கூகுள் அது குறித்து சிந்திக்க தொடங்கி சில அப்டேட்டுகளுடன் அடுத்த வெர்சன்களை களமிறக்கிக் கொண்டிருகிறது.
கூகுள் வெளியிட்ட அட்டவணைகளின்படி, Gemini Ultra (நீல நிறத்தில்) GPT-4 ஐ மிகவும் தரமான அளவுகோல்களில் தோற்கடிப்பதை காட்டுகிறது. இருப்பினும், பெரும்பாலான அளவுகோல்களில், Gemini Ultra ஓபன்ஏஐயின் GPT-4 மாதிரியை சில சதவீத புள்ளிகள் மட்டுமே தோற்கடித்திருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கூகுளின் சிறந்த AI மாதிரி, ஓபன்ஏஐ குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பு செய்ததைவிட சிறிய முன்னேற்றத்துன் இப்போது வெளிவந்து செய்து கொண்டிருக்கிறது. வானாளவிய புகழும் அளவுக்கான அம்சங்கள் எல்லாம் அதில் இல்லை என்கின்றனர் டெக் நிபுணர்கள்.
மேலும், Gemini Ultra இன்னும் ரகசியமாக உள்ளது. ஜனவரி மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டாலும் Gemini Ultra நீண்ட காலத்திற்கு சிறந்த மாதிரியாக இருக்காது. ஓபன்ஏஐ ஏற்கனவே தனது ஜிபிடி 5-ஐ ஒருவருடத்திற்கு முன்பிருந்தே வடிவமைக்கதொடங்கிவிட்டது. அதில் நீங்கள் எதிர்பாராத மாயாஜாலங்கள் எல்லாம் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. அதுவரும்போது கூகுளின் ஜெமினி அல்ட்ரா பின்தங்கியே இருக்கும்.
கூகுள் தனது ஜெமினி டெமோ வீடியோவுடன் ஒரு விளையாட்டு விளையாடியதாகத் தெரிகிறது. வீடியோவில், ஜெமினி ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தின் கீழ் இருந்து ஒரு துண்டு காகிதத்தை கண்காணிக்கும் திறனைக் காட்டுகிறது. இருப்பினும், இந்த வீடியோ ஜெமினி ஏஐ வெர்சனை மிகைப்படுத்தி காட்டுவதற்கான பெரிதும் திருத்தப்பட்டதாக கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
கூகுளின் ஜெமினி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும், ஆனால் இது இன்னும் ஓபன்ஏஐயின் GPT-4 ஐ விட பின்தங்கியுள்ளது. கூகுள் தனது AI ஆராய்ச்சியில் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், அது ஓபன்ஏஐயை பின்தொடராமல் அதை முந்த வேண்டும்.
மேலும் படிக்க | கூகுள் ஜெமினி ஏஐ ஆக்டிவேட் செய்வது எப்படி?