திருப்பதி,
பீகாரின் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மத்திய ரெயில்வே மந்திரியாக பொறுப்பு வகித்தவர். ரெயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், லாலு மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இன்று திருப்பதிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்தனர். லாலு பிரசாத் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரகாரத்தில் வலம் வரும் வீடியோ வலைதளங்களில் வெளியாகியுள்ளது.