விராட் கோலி இல்ல, யார் எனது அணி வீரர்களை சீண்டினாலும் பதிலடி கொடுப்பேன் – கவுதம் காம்பீர்

இந்திய அணியின் முன்னாள் வீரரும், வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருக்கும் கவுதம் காம்பீர் லெஜண்ட்ஸ் லீக்கில் ஸ்ரீசாந்துடன் மோதல் போக்கில் ஈடுபட்டார். இருவரும் களத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சமூகவலைளத்தில் வைரலானதுடன் கிரிக்கெட் வட்டாரத்தைக் கடந்து பெரும் பேசுபொருளானது. ஸ்ரீசாந்த், கவுதம் காம்பீரை கடுமையாக விமர்சித்து இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோவும், விளக்கமும் கொடுத்துவிட்டார்.  ஆனால் கவுதம் காம்பீர் இந்த விவகாரத்தில் இதுவரை மவுனமாகவே இருக்கிறார்.

அவர் லேட்டஸ்டாக பாட்காஸ்ட் ஒன்றில் பேசினார். அதில் காம்பீரிடம் நவீன்உல் ஹக் மற்றும் விராட் கோலி விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப்பட்டது. அதற்கு பதில் அளித்த காம்பீர், “நான் அங்கம் வகிக்கும் அணி வீரர்களை பாதுகாக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. களத்துக்கு உள்ளே சென்று என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் போட்டி முடிதபிறகு அதற்கான எதிர்வினை என்னால் ஆற்ற முடியும். அதனை தான் செய்தேன். நான் அல்லது என்னை சார்ந்திருக்கும் வீரர்களுக்கு அரணாக இருப்பது முக்கியம். அதைதான் அப்போதும் செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த வாக்குவாதத்துக்கு பிறகு இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் கட்டிப்பிடித்து சமாதானம் ஆனார்கள். அதுதான் கவுதம் காம்பீர் கிரிக்கெட் களத்தில் சந்தித்த கடைசி சர்ச்சையாக இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே இன்னொரு சர்ச்சையை அவரை சுற்றி எழுந்திருக்கிறது. ஸ்ரீசாந்தை பிக்சர் என மைதானத்தில் அழைத்து அவரை கடுப்பேற்றியிருக்கிறார். அவரும் பதிலுக்கு என்ன சொல்கிறீர்கள் என திரும்ப திரும்ப கேட்டு  கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து லெஜண்ட்ஸ் லீக் தரப்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ” லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட், கிரிக்கெட் மற்றும் விளையாட்டுத் திறனை நிலைநிறுத்த பாடுபடுகிறது. மேலும் நடத்தை விதிகளை மீறுவது குறித்து உள் விசாரணை நடத்தும். சமூக ஊடக தளங்கள் உட்பட களத்திற்கு வெளியே நடக்கும் எந்தவொரு தவறான நடத்தையும் கண்டிக்கப்படும். லீக்கிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வீரர்கள் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நடத்தை விதிகள் தெளிவாகக் கூறுகின்றன” என தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.