வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அயோத்தி: துதேஸ்வர் வேத வித்யாபீடத்தில் படித்த காசியாபாத்தை சேர்ந்த மோகித் பாண்டே உள்ளிட்ட 50 பேர் அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
உ.பி., மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் அடுத்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை செய்து வருகிறது. இக்கோயிலின் அர்ச்சகர் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 3 ஆயிரம் பேரிடம் நேர்காணல் நடந்தது. அதில் மோகித் பாண்டே உள்ளிட்ட 50 பேர் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மோகித் பாண்டே
மோகித் பாண்டே காசியாபாத்தை சேர்ந்தவர். இவர், அந்த நகரத்தில் உள்ள ஸ்ரீ துதேஸ்வர்நாதர் கோயிலில் செயல்படும் துதேஸ்வர் வேத வித்யாபீடத்தில் படித்தவர். தற்போது, இங்கு 70 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படித்த மாணவர்கள் வட இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement