The ban on girls education is why the world is turning away from us | உலகம் நம்மைவிட்டு தள்ளி நிற்பதற்கு பெண் கல்வி மீதான தடையே காரணம்

காபூல்: “தலிபான்களை விட்டு உலகமும், பொதுமக்களும் தள்ளி நிற்பதற்கு, பெண் கல்விக்கு எதிராக நாம் விதித்து வரும் தொடர்ச்சியான தடையே காரணம்,” என, ஆப்கானிஸ்தானின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் கூறியுள்ளார்.

அனுமதி

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, 2021ல் தலிபான்கள் அதிரடியாக கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர். இங்கு, பெண்களுக்கு எதிராக பல்வேறுகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது; அழகு நிலையங்கள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் பலர், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தொடர் புகார்கள் எழுந்துஉள்ளன. இந்நிலையில், தலிபான்களால் நியமிக்கப்பட்ட அந்நாட்டு துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேர் முகமதுஅப்பாஸ் ஸ்டானிக்சாய், சமீபத்தில் அங்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: அறிவில்லாத சமூகம், இருண்ட சமுதாயத்துக்கு சமமானது.
ஆறாம் வகுப்புக்குமேல் பெண்கள் படிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. அவர்களுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். இது, அவர்களுக்கான உரிமை. கடவுளால் அவர்களுக்கு வழங்கப்பட்டஇயற்கையான உரிமை. இதை, அவர்களிடம் இருந்து யாரால் பறிக்க முடியும்?

இந்த உரிமையை மீறுவது, ஆப்கானியர்களுக்கும், இந்த மக்களுக்கும் எதிரான அடக்குமுறையாகும். கல்வி நிறுவன கதவுகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். அண்டை நாடுகளுடனும், உலகத்துடனும் நமக்கு இருக்கும் ஒரே பிரச்னை கல்வி தான். தேசம் நம்மைவிட்டு துாரமாக இருப்பதற்கும் கல்விப் பிரச்னை தான் காரணம். அது தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.