புதுடில்லி, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் ஆணையம் யு.பி.எஸ்.சி., தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்த தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது.
காலியாக உள்ள பணியிடங்களுக்கான 2023ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே 28 நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஜூன் 12ல் வெளியாகின. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ‘மெயின்’ எனப்படும் முதன்மைத் தேர்வு கடந்த செப்டம்பரில் நடந்தது. மொத்தம் ஒன்பது எழுத்துத் தேர்வுகளை உள்ளடக்கிய இந்தத் தேர்வு ஐந்து நாட்களுக்கு நடந்தது.
இந்த முதன்மைத் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்வு முடிவுகளை http://upsc.gov.in என்ற இணையதளம வாயிலாக அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.- அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ், அடுத்த 15 நாட்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement