நியூயார்க்: காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, அக்., 7ல் துவங்கிய போர் இன்னும் முடிவுக்கு வராதது, உலக நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில் காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் ஓட்டளித்தன. அதேவேளை, தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இங்கிலாந்து பங்கேற்கவில்லை. ஆனால், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நிராகரித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement