What to watch on Theatre & OTT: கோலிவுட் டு ஹாலிவுட் – இந்த வாரம் வெளியாகியுள்ள படங்கள் இவைதான்!

கான்ஜுரிங் கண்ணப்பன் (தமிழ்)

கான்ஜுரிங் கண்ணப்பன்

செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஸ், ரெஜினா, நாசர், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’. காமெடி, ஹாரர் திரைப்படமான இது டிசம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கட்டில் (தமிழ்)

கட்டில் (தமிழ்)

ஈ.வி. கணேஷ்பாபு இயக்கத்தில் ஸ்ருஷ்டி டாங்கே, மைம்மோ, இந்திரா சௌந்தர் ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கட்டில்’. பி.லெனினின் ஸ்க்ரிப்ட் மற்றும் படத்தொகுப்பில் தயாராகியுள்ள படைப்பு இது. ஒரு கட்டிலை மையப்படுத்திய இத்திரைப்படம் டிசம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முத்து, ஆளவந்தான் (தமிழ்)

முத்து, ஆளவந்தான்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்த ‘முத்து’ திரைப்படமும், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த ‘ஆளவந்தான்’ திரைப்படமும் டிசம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டிருக்கிறது.

Hi Nanna (தெலுங்கு)

Hi Nanna

ஷூர்யுவ் இயக்கத்தில் நானி, மிருணால் தாக்கூர், பேபி கியாரா கன்னா, நாசர், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Hi Nanna’. அப்பா சென்ட்டிமன்ட் கதையான இது டிசம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Extra Ordinary Man (தெலுங்கு)

Extra Ordinary Man

வக்கந்தம் வம்சி இயக்கத்தில் நிதின், ஸ்ரீலீலா, ராஜசேகர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Extra Ordinary Man’. காதல், காமெடி திரைப்படமான இது டிசம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Rajni (மலையாளம்)

Rajni

வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத், சைஜு குருப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Rajni’. ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது டிசம்பர் 8ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

A Ranjith Cinema (மலையாளம்)

A Ranjith Cinema

நிஷாந்த் சத்து இயக்கத்தில் ஆசிப் அலி, நமீதா பிரமோத், அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘A Ranjith Cinema’. ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது டிசம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Joram (மலையாளம்)

Joram

தேவாஷிஷ் மகிஜா இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், முகமது ஜீஷன் அய்யூப், தன்னிஷ்தா சாட்டர்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Joram’. கொள்ளை கும்பல்களிடமிருந்து தன் குழந்தையுடன் தப்பி ஓடும் தந்தையின் த்ரில்லான எமோஷனல் கதைதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் டிசம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Wonka (ஆங்கிலம்)

Wonka

பால் கிங் இயக்கத்தில் திமோதி சாலமேட், குஸ்டாவ் டை, முர்ரே மெக்ஆர்தர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Wonka’. அட்வன்ச்சர், காமெடி கலாட்டா நிறைந்த இத்திரைப்படம் டிசம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

The Archie (இந்தி) – Netflix

The Archie

ஜோயா அக்தர் இயக்கத்தில் அகஸ்தியா நந்தா, குஷி கபூர், சுஹானா கான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Archie’. 1960 காலகட்டத்தில் இந்தியாவில் பெரும் கனவுடன் செயல்பட்டு வரும் நண்பர்களால் உருவாக்கப்பட்ட மியூசிக்கல் பேண்டில் நடக்கும் காதல், கனவுகள், நட்பு, பிரச்னைகள் ஆகியவற்றைக் கொண்டதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Mast Mein Rehne Ka (இந்தி) – Amazon Prime Video

Mast Mein Rehne Ka

விஜய் மௌரியா இயக்கத்தில் ஜாக்கி ஷெராஃப், நீனா குப்தா, அபிஷேக் சவுகான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Mast Mein Rehne Ka’. வயதான ஜாக்கி ஷெராஃப், கொள்ளையடிப்பதற்காக ஒரு வயதான கணவரை இழந்தப் பெண்ணின் வீட்டிற்குச் செல்கிறார். அங்கு இருவருக்கும் காதல் ஏற்பட, அவர்கள் இருவரும் தங்கள் கடைசி காலத்தை காதலுடன் வாழத் தொடங்குவதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ தளத்தில் வெளியாகியுள்ளது.

Kadak Singh (இந்தி) – Netflix

Kadak Singh

அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கத்தில் பங்கஜ் திரிபாதி. பார்வதி, சஞ்சனா சங்கி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Kadak Singh’. குற்றவியல் துறையில் பணிபுரியும் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, தன்னுடைய மறதி நோயுடன் மிகப்பெரிய மோசடி வழக்கை எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Netflix’ தளத்தில் வெளியாகியுள்ளது.

Leave the World Behind (ஆங்கிலம்) – Netflix

Leave the World Behind

சாம் எஸ்மெயில் இயக்கத்தில் ஜூலியா ராபர்ட்ஸ், மஹெர்ஷாலா அலி, ஈதன் ஹாக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Leave the World Behind’. திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Merry Little Batman (ஆங்கிலம்) – Netflix

Merry Little Batman

மைக் ரோத் இயக்கத்தில் உருவாகியுள்ள கார்ட்டூன் அனிமேஷன் திரைப்படம் இது. லூக் வில்சன், யோனாஸ் கிப்ரேப், ஜேம்ஸ் குரோம்வெல் உள்ளிட்டோர் உருவாக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘Netflix’ தளத்தில் வெளியாகியுள்ளது.

Your Christmas or Mine 2 – Amazon Prime Video

Your Christmas or Mine 2

ஜிம் ஓ’ஹான்லன் இயக்கத்தில் ஆசா பட்டர்ஃபீல்ட், ஜேன் கிராகோவ்ஸ்கி, டேவிட் பிராட்லி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Your Christmas or Mine 2’. இது கடந்த ஆண்டு இதே பெயரில் வெளியான படத்தின் இரண்டாம் பாகம். காதல், நட்பு, காமெடி திரைப்படமான இது ‘Amazon Prime Video’ தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வார வெப்சீரிஸ்

Vadhuvu (தெலுங்கு) – Disney+ Hotstar

Vadhuvu

போளூரி கிருஷ்ணா இயக்கத்தில் நல்ல ஸ்ரீதர் ரெட்டி, கப்பர் அவிகா கோர், மௌனிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு வெப்சீரிஸ் ‘Vadhuvu’. இந்த வெப்சீரிஸ் ‘Disney + Hotstar’ தளத்தில் வெளியாகியுள்ளது.

Chamak (இந்தி) – SonyLiv

Chamak

ரோஹித் ஜக்ராஜ் இயக்கத்தில் சித்தார்த் ஷா, மனோஜ் பஹ்வா, ஜிப்பி கிரேவால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘Chamak’. பஞ்சாப்பைச் சேர்ந்த ரேப் இசைப் பாடகரின் தீராக் கனவுதான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் ‘SonyLiv’ தளத்தில் வெளியாகியுள்ளது.

Turn of the Tide (ஆங்கிலம்) – Netflix

Turn of the Tide

அகஸ்டோ ஃப்ராகா இயக்கத்தில் ஜோஸ் காண்டேசா, ஹெலினா கால்டீரா, ஆண்ட்ரே லீடாவோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Turn of the Tide’. போதைப் பொருள் விவகாரத்தில் மாட்டிக் கொள்ளும் நான்கு நண்பர்களை மையப்படுத்திய கதைதான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ தளத்தில் வெளியாகியுள்ளது.

My Life with the Walter Boys (ஆங்கிலம்) – Netflix

My Life with the Walter Boys

மெலனி ஹால்சல் ஆக்கத்தில் நிக்கி ரோட்ரிக்ஸ், நோவா லாலோண்டே, ஆஷ்பி ஜென்ட்ரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘My Life with the Walter Boys’. காதல், ரொமான்ஸ் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (தமிழ்) – Netflix

எஸ்.ஜே.சூர்யா – லாரன்ஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜிகர்தண்டா’ படத்தின் அடுத்த பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. காமெடி, ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Raid (தமிழ்) – Aha Tamil

Raid | ரெய்டு

கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஶ்ரீதிவ்யா, அனந்திகா, டேனியல் உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘Raid’. சமூகத்தில் தவறு செய்பவர்களைத் தட்டிக்கேட்கும் சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் (விக்ரம் பிரபு), என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டார், அவரது நோக்கம் என்ன என்பதுதான் இதன் கதைக்களம். ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது தற்போது ‘Aha Tamil’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Adrishya Jalakangal (மலையாளம்) – Netflix

Adrishya Jalakangal

பிஜுகுமார் தாமோதரன் இயக்கத்தில் டோவினோ தாமஸ், நிமிஷா சஜயன், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Adrishya Jalakangal’. காதல், போர் மற்றும் இழப்பு போன்றவற்றை மையமாகக் கொண்டு வித்தியாசமான பாணியில் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைப் பற்றிச் சொல்லுவதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Tagaru Palya (தெலுங்கு) – Amazon Prime Video

Tagaru Palya

உமேஷ் கே.கிருபா இயக்கத்தில் ஷரத் லோஹிதாஷ்வா, நாகபூஷனா, அம்ருதா பிரேம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘Tagaru Palya’. இத்திரைப்படம் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Keedaa Cola (தெலுங்கு) – Aha Tamil

Keedaa Cola

தருண் பாஸ்கர் தாஸ்யம் இயக்கத்தில் பிரம்மானந்தம், தருண் பாஸ்கர் தாஸ்யம், ரகுராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Keedaa Cola’. வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் ஆசையுடன் ஹீரோவும், அவரது நண்பர்களும் சுற்றித் திரிகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்கள் என்ன செய்தார்கள், அதனால், அவர்கள் என்ன பிரச்னைகளையும் எதிர்கொண்டார்கள் என்பதுதான் இதன் கதைக்களம்.

ஆக்ஷன், காமெடி, அட்வன்சர் திரைப்படமான இது தற்போது ‘Aha Tamil’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Ahimsa (தெலுங்கு) – Amazon Prime Video

Ahimsa

தேஜா இயக்கத்தில் அபிராம் டக்குபதி, கீதிகா, ஆனந்த் பாபு, சதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ahimsa’. ஆக்‌ஷன், ரொமான்ஸ் ஜானர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Maa Oori Polimera 2 (தெலுங்கு) – Aha Tamil

Maa Oori Polimera 2

அனில் விஸ்வநாத் இயக்கத்தில் பாலாதித்யா, காமக்ஷி பாஸ்கர்லா, சாஹிதி தாசரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Maa Oori Polimera 2’.

மர்மமான முறையில் இறந்துபோன தம்பியின் மரணத்தின் பின்னணியைக் கண்டுபிடிக்கப் போராடும் ஒரு காவல்துறை அதிகாரியை மையமாகக் கொண்டது இதன் கதைக்களம். க்ரைம் திரில்லர் திரைப்படமான இது தற்போது ‘Aha Tamil’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Dhak Dhak (இந்தி) – Netflix

Dhak Dhak

தருண் துடேஜா இயக்கத்தில் பாத்திமா சனா ஷேக், தியா மிர்சா, பெனடிக்ட் காரெட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Dhak Dhak’. சாதாரணக் குடும்பப் பின்னணியைக் கொண்ட நான்கு வெவ்வேறு வயதுடையைப் பெண்கள் பல தடைகளைத் தாண்டி நீண்ட தூரம் லடாக் வரை பைக்கில் பயணிப்பதுதான் இதன் கதைக்களம். இப்படம் தற்போது ‘Netflix’ தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் வெளியாகியுள்ள படைப்புகளில் உங்கள் சாய்ஸ் என்ன என்பதை கமென்ட்டில் பதிவிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.