பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்துள்ள கருத்துக்கள் வரவேற்கத்தக்கது..

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், முன்வைத்துள்ள முன்மொழிவை வரவேற்கின்றேன் என்று நீர் வழங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு அதற்கேற்ற வகையில் நியாயமான ஒரு சம்பள உயர்வை பெருந்தோட்ட கம்பனிகள் வழங்க வேண்டும் எனறும் அழைப்பு விடுத்துள்ளார்..

எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் பெருந்தோட்ட கம்பனிகள் தமது நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி பணிப்பு விடுத்துள்ள நிலையில் கம்பனிகளின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்ட பின்னர் எமது தரப்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காணி உரிமை உள்ளிட்ட விடயங்கள் சம்மந்தமாகவும் ஜனாதிபதி இதன்போது பேச்சு நடத்தியுள்ளமை மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விரைவில் காணி உரிமை கிடைக்கவுள்ளது என்பது மற்றுமொரு சான்றாகும்.

மேலும், அரச பங்காளியாக இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகம் தொடர்பிலும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பிலும் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மகிழ்ச்சியளிக்கின்றது.

எனவே, மலையகம் தொடர்பில் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் நகர்வுகளுக்கு ஏனைய மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கி சமூக மேம்பாட்டுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்றும் அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று, அதற்குரிய தலையீடுகளை செய்துவரும் தொழில் அமைச்சருக்கம் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.