இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது சேவை காலத்தை முடித்து இந்தியா திரும்புவதற்கு முன், பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் நேற்று (2023.12.10) சந்தித்தார்
.தனது பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த உயர்ஸ்தானிகர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு ஒருபோதும் மாற்றமுறாது என்றும் தெரிவித்தார்.
தனக்குப் பின்னர் நியமிக்கப்படும் புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தனக்குப் போன்றே ஆதரவு கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும்கோபால் பாக்லே மேலும் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்கு கோபால் பாக்லே அவர்கள் வழங்கிய ஆதரவைப் பாராட்டிய பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கையின் அயல் நாடு என்ற வகையில் கடினமான காலங்களில் இந்தியாவிடம் இருந்து கிடைத்த உதவி மற்றும் ஆதரவை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, திருமதி கோபால் பாக்லே ஆகியோரும் கலந்துகொண்டனர்.