`நான் உன் பெரியப்பாடா… என்னை விட்டுரு!' – பாஜக மாவட்ட மகளிரணி தலைவியின் கணவருக்கு நேர்ந்த துயரம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் இருக்கிறது இராஜாளிப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி கவுண்டர் (80). இவரின் மகன்கள் வேலு (56), சாமிக்கண்ணு (52). இதில், வேலு மணப்பாறை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரர் சாமிக்கண்ணு, விராலிமலை அருகே உள்ள விருதாபட்டி கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ரெங்கசாமி கவுண்டரின் இந்த இரு மகன்களுக்கிடையே சொத்து சம்பந்தமாக நீண்டகாலமாக தகறாறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதைவைத்து இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், சாமிக்கண்ணுவின் மகன் சதீஸ்குமார் (25) நேற்று இராஜாளிப்பட்டியில் உள்ள தனது பெரியப்பா வேலுவின் வீட்டிற்கு சென்று சொத்து குறித்து பேசியதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த சதீஸ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேலுவை குத்தியும், கல்லை தூக்கி நெஞ்சில் போட்டும் தாக்கியுள்ளார். ‘நான் உன் பெரியப்பாடா…என்னை விட்டிரு’ என்று வேலு கெஞ்சியும் சதீஸ்குமார் அவரை விடவில்லை.

அப்போது, அங்கிருந்த ரெங்கசாமி கவுண்டரையும் சதீஸ்குமார் கத்தியால் குத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் வேலுவை பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், படுகாயமடைந்த ரெங்கசாமி கவுண்டரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த விராலிமலை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சதீஸ்குமாரை தேடி வருகின்றனர். சதீஸ்குமார் கத்தியால் குத்தியதில் இறந்த வேலுவின் மனைவி திருப்பதி (48) என்பவர், புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க-வில் மாவட்ட மகளிரணி தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சொத்து தகராறில் இளைஞர் ஒருவர் சொந்த பெரியப்பாவையே கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.