சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பதிவான மழையினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் ஆய்வு செய்ய மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர். ஆறு அடங்கிய குழுவினர் இந்த பணியை மேற்கொள்ள உள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்தியமூர்த்தி தலைமையில் இந்த பணி நடைபெற உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை கள ஆய்வு செய்த பிறகு தமிழக தலைமை செயலாளருடன் இக்குழு ஆலோசனை நடத்துகிறது.. இரண்டு நாள் பயணமாக மத்திய குழு சென்னை வந்துள்ளது.
ஏற்கெனவே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் மழை பாதிப்புகளை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு மீட்பு பணிகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வேண்டும் என தெரிவித்துள்ளது. மழை வெள்ள பாதிப்பு நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்க உள்ளது தமிழக அரசு.