சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக இதுவரை 28,563 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் புயல் மழையால் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு வருவதால், இன்று 4 பள்ளிகள் செயல்படவில்லை என்றும் தெரிவித்தார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3ந்தேதி முதல் பலத்த மழை கொட்டியது. 4ந்தேதி புயல் சென்னையை அடுத்த ஆந்திரா கடற்கரை பகுதியில் கரையை கடந்த நிலையில், கனமழை மற்றும் சூறாவளி காற்றால், வடகடலோர மாவட்டங்களான […]