வழக்கமான மொபைல் வச்சுக்க சலிப்பா இருக்கா… இந்த ஸ்டைலிஷ் மொபைல்களை வாங்கலாம்!

Flip Smartphones In Budget Price: பலருக்கும் வித்தியாசமான மொபைல்களை பயன்படுத்த மிகவும் பிடிக்கும். ஸ்மார்ட்போன்களில் வெவ்வேறு ஸ்கிரீன் அளவுகள் மற்றும் டிசைன்களின் அடிப்படையில் எக்கச்சக்க மாடல்கள் இருப்பதால் அவரவர் தங்களுக்கு பிடித்தமான வடிவமைப்பை பெற்ற மொபைல்களை வாங்கிக்கொள்கின்றனர். 

அந்த வகையில், வழக்கமான ஸ்மார்ட்போன்கள் உங்களுக்கு மிகவும் சலிப்பை ஏற்படுத்துவதாக இருந்தால், நீங்கள் வேறு விதமான ஸ்டைலிஷ் மொபைல்களை வாங்கலாம். குறிப்பாக, தற்போது ஃபிளிப் மாடலில் ஸ்மார்ட்போன்கள் (Flip Smartphone) கிடைக்கிறது. ஃபிளிப் நமக்கு புதிதில்லை என்றாலும், ஸ்மார்ட்போன்களில்  பல்வேறு புதிய அம்சங்ளுடன் இது கிடைக்கிறது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், 2023 ஆம் ஆண்டில், பல ஃபிளிப் மொபைல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Motorola, Tecno, Samsung போன்ற முன்னணி நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களை விட ஃபிளிப் மொபைல்களை பட்ஜெட் விலையில் கிடைக்கின்றன. ஃபிளிப் மொபைல்கள் அமேசான் தளத்தில் பல்வேறு சலுகைகள், தள்ளுபடிகளுடன் விற்பனையில் உள்ளது. அதில் சிலவற்றை இங்கு காணலாம். 

Tecno Phantom V Flip

இந்த ஸ்மார்ட்போனை அமேசானில் இருந்து 54 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம். வங்கி அட்டை மூலம் இந்த போனில் 1500 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும், 2 ஆயிரத்து 666 ரூபாயில் இருந்து மாதத் தவணை திட்டம் தொடங்குகிறது. பழைய மொபைலுக்கு ஈடாக அதாவது எக்ஸ்சேஞ் ஆப்பரில் 37 ஆயிரத்து 50 ரூபாய் வரை இந்த மொபைலுக்கு தள்ளுபடியும் கிடைக்கும். 

இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்த்தால், 6.9 இன்ச் மெயின் மற்றும் 1.32 இன்ச் கவர் டிஸ்ப்ளே உள்ளது. இது 16ஜிபி RAM (8+8ஜிபி), 64MP பின்பக்க கேமரா, 32MP செல்ஃபி கேமரா, 4000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.

Motorola Razr 40 Ultra

இந்த ஸ்மார்ட்போனை அமேசானில் இருந்து 79 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம். 3 ஆயிரத்து 879 ரூபாயில் இருந்து மாதத் தவணையாக செலுத்தியும் இந்த மொபைலை நீங்கள் வாங்கலாம். பழைய மொபைலை எக்ஸ்சேஞ் செய்ய விரும்பினால், 32 ஆயிரத்து 50 ரூபாய் வரை தள்ளுபடியும் கிடைக்கும். 

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பார்த்தால், 6.9 இன்ச் மெயின் மற்றும் 3.6 இன்ச் கவர் டிஸ்ப்ளே உள்ளது. இது தவிர, ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 பிராசஸர், 12MP பின்புற கேமரா, 32MP செல்ஃபி கேமரா, 3800mAh பேட்டரி மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

Samsung Galaxy Z Flip5

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களைப் பற்றி பார்த்தால், போனில் 6.7 இன்ச் மெயின் மற்றும் 3.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இதில் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 பிராசஸர், 12MP டூயல் ரியர் கேமரா, 10MP செல்ஃபி கேமரா மற்றும் 3700mAh பேட்டரி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை அமேசானில் இருந்து 99 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் விற்பனையின் சிறப்பு என்னவென்றால், இதனை ஹெச்டிஎப்சி வங்கி அட்டை மூலம் நீங்கள் வாங்கினால் 7000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும், 4 ஆயிரத்து 849 ரூபாயில் இருந்து மாதத் தவணை திட்டம் தொடங்குகிறது. பழைய போனுக்கு ஈடாக ரூ. 39 ஆயிரத்து 50 ரூபாய் வரை இந்த மொபைலுக்கு தள்ளுபடியும் கிடைக்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.