சென்னை: எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கடல்லி கலந்துள்ள கச்சா எண்ணெய் கழிவுகளை டிசம்பர் 17-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சிபிசிஎல் நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.18-ம் தேதி நடைபெறும் விசாரணையின்போது, அதுதொடர்பான அறிக்கையை சிபிசிஎல், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வடசென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய்க் கழிவு, கொசஸ்தலை ஆற்றில் கலந்து எண்ணூர் ருகே கடலில் பரவியுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி […]
