Smartphones: இப்போதுள்ள ஸ்மார்ட்போன்களில் ஸ்டோரேஜ் என்பது மிகவும் முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. RAM மற்றும் இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் பல்வேறு வேரியண்ட்களில் பல நிறுவனங்கள் மொபைலை விற்பனை செய்து வருகின்றன. பேட்டரி, டிஸ்பிளே, பிராஸஸர் போன்று மெமரியும் வாடிக்கையாளர்களால் அதிகம் கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது.
மொபைல் கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், பெரிய ஸ்டோரேஜை எடுக்கும் வீடியோ கேம்களை விளையாடவும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த ஸ்டோரேஜை அதிகம் கொடுக்கின்றனர். 6ஜிபி, 8ஜிபி, 12ஜிபி RAM என பல்வேறு வேரியண்ட்களில் ஸ்மார்ட்போன்கள் வருகின்றன. இதில், 6ஜிபி RAM கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
Samsung, Oppo, Realme, Xiaomi போன்ற அனைத்து நிறுவனங்களாலும் 6ஜிபி RAM கொண்ட ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படுகின்றன. 6ஜிபி RAM கொண்ட ஸ்மார்ட்போனை நீங்கள் மலிவாக வாங்க விரும்பினால், இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அமேசானில் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்க விரும்பும் ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு காணலாம். அமேசான் இந்த நேரத்தில் பல்வேறு வங்கி கார்டுகளில் பல தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது.
Lava Blaze 2
இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் உடன் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த போன் Unisoc T616 பிராஸஸருடன் வருகிறது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பேட்டரியை வைத்துள்ளது. இதில், 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே உள்ளது. ஸ்மார்ட்போனில் 13MP AI இரட்டை பின்புற கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அமேசானில் இந்த போன் 8 ஆயிரத்து 967 ரூபாய்க்கு கிடைக்கிறது. 435 ரூபாயில் மாதத் தவணையிலும் வாங்கலாம்.
TECNO Camon 19 Neo
இந்த டெக்னோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் உடன் 128ஜிபி உள் சேமிப்பு உள்ளது. ஸ்மார்ட்போன் 48MP AI மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. செல்ஃபிக்களுக்காக 32எம்பி முன்பக்க கேமராவுடன் இந்த போன் வருகிறது. இதில் 6.8 இன்ச் LTPS டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன் MediaTek Helio G85 செயலி மற்றும் 5000mAh பேட்டரியுடன் வருகிறது. அமேசானில் இந்த போன் ரூ.8,999க்கு கிடைக்கிறது. 436 ரூபாய் மாதாந்திர தவணையிலும் இந்த போனை வாங்கலாம். இந்த போன்களில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு.
Redmi 12C
இந்த Redmi ஸ்மார்ட்போன் மாடலில் பல வகைகள் உள்ளன. இதன் டாப் வேரியண்டில் 6ஜிபி RAM உடன் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த MediaTek Helio G85 பிராஸஸர் உள்ளது. மேலும், ஸ்மார்ட்போனில் 500nits பீக் பிரைட்னஸ் கொண்ட HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஃபோனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 10W சார்ஜிங் வசதி உள்ளது. அமேசானில் இந்த போன் 9 ஆயிரத்து 299 ரூபாய்க்கு கிடைக்கிறது. 451 ரூபாய் மாதாந்திர தவணையிலும் வாங்கலாம்.